அறப்பளீஸ்வர சதகம்: ஆட்சியாளர் சிறப்பு!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

அரசர் சிறப்பு

மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாட
வரும்அதிக ரணவீ ரமும்,
வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,
வாசிமத கரியேற் றமும்,
கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,
கைகண்ட போர்ப்ப டைஞரும்,
கசரத பதாதியும், துரகப்ர வாகமும்
கால தேசங்க ளெவையும்
இனிதாய் அறிந்ததா னாபதிக ளொடுசமர்க்
கிளையாத தளகர்த் தரும்,
என்றும்வற் றாததன தானிய சமுத்திரமும்,
ஏற்றம்உள குடிவர்க் கமும்,
அனைவோரும் மெச்ச இங்கிவையெலாம் உடையபேர்
அரசராம்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அருமை தேவனே!, மனுவினால்
ஏற்படுத்தப்பெற்ற அரசநெறி ஒழுங்கும், மற்ற மன்னர்கள் புகழுமாறு காணப்படும் சிறந்த போர்வீரமும், வாள்கொண்டு
வெற்றிபெறுவதுடன் இனிய முறையிலே தொழிலை முடித்துக்கொள்ளும்
சிறப்பும், குதிரை யேற்றம் யானையேற்றங்களில்
பயிற்சியும், பெருமை மிக்க மந்திரிகளும், உறுதியான அரணும், பயிற்சி
பெற்ற போர் வீரரும், யானை தேர் காலாட்களும், குதிரை வெள்ளமும், காலம் இடம் முதலானவற்றையெல்லாம் நன்றாக
உணர்ந்த தானத் தலைவருடனே,
போர்க்குப் பின்னடையாத படைத்தலைவரும், எப்போதும் குறையாத பொன்னும் தானியமும் ஆகிய
பெருக்கும், (வெளிநாட்டில் இருந்தும்) வந்து சேரும் இயல்புடைய பலவகைக் குடிகளும், இங்குக் கூறப்பட்ட இவற்றையெல்லாம் யாவரும் புகழப் பெற்றவர்களே அரசராவர்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply