அறப்பளீஸ்வர சதகம்: கவிஞன்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

கவிஞன்

தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்
தேன்மடை திறந்த தெனவே
செப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்
தெரிந்துரைசெய் திறமை யுடனே
விள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்
விரிவிலக் கணவி கற்பம்
வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்
மிக்கப்ர பந்த வண்மை
உள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலை
யொத்ததிக சபைகண் டபோ
தோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ர சங்கம
துரைப்பவன் கவிஞ னாகும்!
அள்ளிவிடம் உண்டகனி வாயனே! நேயனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

நஞ்சை அள்ளிப்பருகிய கனிபோலுஞ் சிவந்த வாயனே!, (உயிர்களிடம்)
அன்புடையவனே!, தூயவனே!, அருமை .தேவனே!,
தெளிந்த அமுதவொழுக்குப் போலவும்; இனிமை மிகுந்த புதிய தேன்
மடைதிறந்தது போலவும்; சொல்லப்படும்
முத்தமிழுடன், நால்வகைக்
கவிகளையும் நால்வகைப் பொருளையும் அறிந்து, கூறும் ஆற்றலோடும், கூறுதற்கரிய காவியத்தின் உட்பொருளையும் அணியையும் விரிவான ஐவகையிலக்கணத்தையும், வேறும்உள தொன்னூல் வழக்கும் உலகத்து இயல்பும் மிக்கப் பிரபந்த வன்மை உள்ள எல்லாம்
அறிந்து மற்றும் இருக்கின்ற பழைமையான நூல்வழக்கையும்
உலகவழக்கையும் மிகுந்த பிரபந்தங்களின் சிறப்பையும் மேலும் உள்ளயாவற்றையும் அறிந்து, அலை அடங்கிய கடலைப்போல விருந்து, பேரவையைப் பார்த்த
காலத்தில், பேரலை முழங்கும் கடலைப்போலச் சொற்பொழிவு
செய்பவன் கவிஞன் ஆவான்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply