அறப்பளீஸ்வர சதகம்: யாரிடம் எது தூய்மை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeafe0aebee0aeb0e0aebfe0ae9f.jpg" alt="arapaliswarar - Dhinasari Tamil" class="wp-image-239389 lazyload ewww_webp_lazy_load" title="அறப்பளீஸ்வர சதகம்: யாரிடம் எது தூய்மை! 1 - Dhinasari Tamil" decoding="async" data-sizes="auto" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeafe0aebee0aeb0e0aebfe0ae9f.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeafe0aebee0aeb0e0aebfe0ae9f.jpg.webp 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeafe0aebee0aeb0e0aebfe0ae9f-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeafe0aebee0aeb0e0aebfe0ae9f-3.jpg.webp 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeafe0aebee0aeb0e0aebfe0ae9f-1.jpg.webp 1200w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeafe0aebee0aeb0e0aebfe0ae9f.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeafe0aebee0aeb0e0aebfe0ae9f-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeafe0aebee0aeb0e0aebfe0ae9f-3.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeafe0aebee0aeb0e0aebfe0ae9f-1.jpg 1200w">

தூய்மை

வாம்பரி தனக் கதிக புனிதம்முகம் அதனிலே;
மறையவர்க் குயர்பு னிதமோ
மலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்கு
மாசில்முற் புறம்அ தனிலே;
மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;
மிக்கமட மாத ருக்கோ
மேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடு
மேவுவனி தையர்த மக்கும்
தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண் கலம்அயம்
தங்கம்ஈ யந்த மக்கும்
தரும்புனிதம் வருபெருக் கொடுபுளி சுணம்சாம்பல்
சாரும்மண் தாது சாணம்
ஆம்புனிதம் இவையென்பர்; மாமேரு வில்லியே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

பெருமைமிக்க மேருவை
வில்லாக்கியவனே!, குற்றம் அற்றவனே!, அருமை தேவனே!, தாவிச்செல்லுங் குதிரைக்கு முகத்திலே மிகுதூய்மை,
மறையுணர்ந்த அந்தணர்க்கு மலரனைய அடிகளிலே மிகுதூய்மை, ஒளியையுடைய
கண்ணாடிக்குக் குற்றமற்ற முன்புறத்திலே தூய்மை, உயர்ந்த ஆவுக்குப் பின் புறத்திலே (தூய்மை), சிறந்த இளம்பெண்களுக்கு
மெய்யெல்லாம் தூய்மையாகும், தீட்டுற்ற (பூப்படைந்த) பெண்களுக்கும், தாம்பிரத்திற்கும், அதிக வெள்ளிக்கும் வெண்கலத்திற்கும் இரும்புக்கும்
பொன்னுக்கும் ஈயத்தினுக்கு், தூய்மையைத் தருகிற,
வருகின்ற வெள்ளத்துடன் புளியும், சுண்ணப்பொடியும்
சாம்பலும், பொருந்திய மண்ணும், காவிக்கல்லும், சாணமும் ஆகிய இவைகள் (முறையே) தூய்மை தரும் என்று (அறிஞர்) கூறுவர்.

சில பொருள்களை இங்குக் கூறியவாறு தூய்மை செய்தல் உலகியல்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply