பெரியாழ்வார் – அறிமுகம்
இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே !*
இன்றைக்கு என்ன ஏற்றம் எனில் உரைக்கேன் * – நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த *
நல் ஆனியில் சோதி நாள்.
அவதரித்த ஊர் : ஸ்ரீவில்லிபுத்தூர்
மாதம் : ஆனி
நட்சத்திரம் : சுவாதி
அம்சம் : கருடாம்சம்
அருளிச் செய்த பிரபந்தம் : பெரியாழ்வார் திருமொழி
——-
(குருபரம்பரைப்படி…)
ஜ்யேஷ்டே ஸ்வாதீ பவம் விஷ்ணுரதாம்சம் தந்விநாபுரே
ப்ரபத்யே ச்வசுரம் விஷ்ணோ: விஷ்ணுசித்தம் புரச்சிகம்.
பெரிய திருவடியாகிற கருடாம்ஸராய், ஸ்ரீவில்லிபுத்தூரிலே கலி 47-வதன க்ரோதன வருஷம் ஆனிமாஸம் சுக்லபக்ஷம் ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரத்தில் வேயர்குலத்தில் பதுமையாருக்கும் முகுந்தாசார்யருக்கும் புத்திரராய் அவதரித்தார்.
பாண்டியதேச அரசன் ஸ்ரீவல்லபதேவன் சபையில் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை பலரும் அறியும்படி திருவாய் மலர்ந்து ஸ்தாபித்து அரசனது பட்டத்து யானையின் ஸேவைஸாதிக்க, வாழ்த்தி பல்லாண்டு பல்லாண்டு என்று முதலெடுத்து மங்களாசாஸனம்
செய்தருளினார்.
இவர் செய்தருளிய பிரபந்தம் பெரியாழ்வார் திருமொழி-473 பாசுரங்கள்.
மங்களாசாஸனம் செய்தருளிய திவ்யதேசங்கள்-20.{jcomments on}