மாசிப் புனர்ப்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர் *
தேசு இத்திவசுத்துக்கு ஏது என்னில் * – பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால் *
நல்லவர்கள் கொண்டாடும் நாள்.
அவதரித்த ஊர் : திருவஞ்சிக்களம்
மாதம் : மாசி
நட்சத்திரம் : புனர்ப்பூசம்
அம்சம் : கௌஸ்துபாம்சம்
அருளிச் செய்த பிரபந்தம் : பெருமாள் திருமொழி
—-
style="text-align: center;">(குருபரம்பரைப்படி…)
கும்பே புநர்வஸூபவம் கேரளே கோளபட்டணே
கௌஸ்துபாம்சம் தராதீசம் குலஸேகர மாச்ரயே.
பெருமாளின் ஸ்ரீகௌஸ்துப அம்ஸமாய், கொல்லிநகரத்தில் வஞ்சிக்களத்திலிருந்து அரசாண்ட த்ருடவ்ரதன் என்ற சந்திரகுலத்து அரசனுக்கு புத்திரராக கலி 28-வதான பராபவ வருஷம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக்கிழமை புனர்வஸு நக்ஷத்திரத்தில் அவதரித்தார். ராமபிரானது அனந்த கல்யாண குணங்களாகிய பெருங்கடலில் ஆழ்ந்து ஈடுபட்டு, அர்ச்சாவதாரத்திலும் மிக்க பக்திப் பெருங்காதல் கொண்டு வாழ்ந்தார். இந்த லீலா விபூதியில் 120 வருஷம் எழுந்தருளியிருந்தார்.
இவர் செய்தருளிய பிரபந்தம் பெருமாள் திருமொழி 105 பாசுரங்கள்.
மங்களாசாஸனம் செய்தருளிய திவ்யதேசங்கள் – 8.{jcomments on}