வட மாநிலங்களில் காளி பூஜையாக வழிபடுகிறார்கள்சரஸ்வதி பூஜை அன்று நமது தொழில் கருவிகள், கணக்குப் புத்தகங்கள், படிக்கும் புத்தகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதி படத்துக்கு வெள்ளை நிற மலர்களால் (மல்லி, சம்பங்கி, வெண் தாமரை) அலங்காரம் செய்து, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி படித்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும். சரஸ்வதி பூஜையில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வைத்து வழிபட்டு மறுநாள் படித்தல் மிகவும் சிறப்பானது.
சரஸ்வதி பூஜை வழிபாட்டுக்கு உகந்த நேரம்
மிக நல்ல நேரம் (அஷ்டம சுத்தியான நல்ல நேரம்)
காலை 6:3 0 – 8:00
மதியம் 12:30 – 1:20
மாலை 5:00 – 6:00
மாலை 6:30 – 7:30
சரியான இராகு காலம் காலை 8:56 – 10:25சரியான எமகண்டம் மதியம் 1:23 – 2:52100 கிராம் நவதானியத்தை நன்கு ஊற வைத்து, அதில் 1 கிலோ கோதுமை தவிடு, 100 கிராம் வெல்லம் கலந்து குதிரை அல்லது பசுவுக்கு தானம் செய்வது மிகவும் புண்ணியத்தைத் தரும்.
விஜய தசமி 17.10.2010 ஞாயிறு
முன்தினம் பூஜையில் வைத்த புத்தகத்தை எடுத்து படிக்கவும், தொழில் கருவிகளைக் எடுத்து வைத்து தொழில் சிறப்பான முறையில் மேன்மையடையப் பிரார்த்தனை செய்து அன்றைய தொழிலைத் துவக்க வேண்டும். மாணவர்கள் பூஜையில் வைத்த புத்தகத்தை எடுத்து சரஸ்வதியின் அருள் பரிபூரணமாக அமையட்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு படிக்கவும். சரஸ்வதியின் அருளால் அறிவும், கல்வியும் மேம்பட்டு மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்.
விஜய தசமி அன்று தொழில் துவக்க, புத்தகம் படிக்க
நல்ல நேரம்
காலை 5:30 – 6:30, 9:00 – 9:50, 11:00 – 11:50
சிறுவர்களை பள்ளியில் சேர்த்து வித்யாரம்பம் செய்ய
நல்ல நேரம்
காலை 9:00 – 9:50–
தகவல்: பாலு. சரவணசர்மா
www.prohithar.com