உங்கள் ஜாதக அமைப்பு இப்படி இருக்கிறதா? கருடனை வணங்குங்கள்

ஆன்மிக கட்டுரைகள் ஜோதிடம்

சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்

கருட ஜெயந்தி..!!

ஆடி மாதம் வருகின்ற சுவாதி நட்சத்திரத்தில் கருட ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் பில்லி, சூன்யம், நாக தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

நீங்கள் இந்த நட்சத்திரமா? கருடனை வணங்குங்கள̷் 0;

ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

புதனின் சாரம் பெற்ற ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

சர்ப்பங்களை அதிதேவதையாக கொண்ட ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

பித்ரு ஸ்தானங்களில் ராகுஃகேது அமைய பெற்றவர்கள்.

ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்.

சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகுஃகேது சேர்க்கை பெற்றவர்கள்.

காலசர்ப்ப தோஷத்தில் பிறந்தவர்கள்.

பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள்.

பில்லி, சூன்யம் போன்ற தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோச்சாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்றவர்கள்.

கருடபகவானை வணங்கிவர சகல பயமும் நீங்கி தைரியம் ஏற்படும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து சகல நன்மைகளும் ஏற்படும்.

கருட தரிசனம் :

கருட தரிசனம் சுப சகுனமாகும்.

பெருமாளுடன் கூடிய ஸ்ரீ கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டுத் துணியை அணிவித்து மல்லி, மரிக்கொழுந்து, கதிர்ப்பச்சை, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்தால் நன்மை பயக்கும்.

கருடன் எப்பொழுதும் வைகுந்தத்தில் பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்.

கருடாழ்வாருக்கு மாலையில் பூஜை செய்வது மிகவும் சிறந்தது.

பெண்கள் குங்குமத்தை கொண்டு கருடனை அர்ச்சனை செய்யலாம்.

எல்லா ஆலயங்களிலும் குடமுழுக்கு திருவிழா நிகழும்போது விமானத்திற்கு மேலே கருட பகவான் வட்டமிடுவது புனிதமாக கருதப்படுகிறது.

விஷ ஜந்துக்கள் இல்லங்களுக்குள் வராமல் இருக்க கருட கிழங்கை வாசலில் கட்டும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

கருடனின் நிழல் விழும் இடங்களில் பயிர்கள் செழுமையாக விளையும் என்பது நம்பிக்கை.நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப நமது உடலில் இருந்து பிரிந்து சென்ற ஆன்மா அனுபவிக்க இருக்கின்ற பயணம் பற்றியும்,

நாம் செய்த தீய செயல்களின் விளைவால் நாம் அனுபவிக்க இருக்கின்ற தண்டனைகளை பற்றியும் உபதேசிக்கப்பட்ட புராணம்

கருட புராணம்

Email

Leave a Reply