ஏழு மலைகள் என்னென்ன?

ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை சொல்லில்…

மேலும் படிக்க... ஏழு மலைகள் என்னென்ன?

பூஜைக்கு உரிய மலர்கள் எவை?

விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் பிள்ளையாருக்கு…

மேலும் படிக்க... பூஜைக்கு உரிய மலர்கள் எவை?

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும். நமஸ்தே…

மேலும் படிக்க... வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

ஆடி-18 அரங்கன் சீர் பெறும் காவிரி அன்னை!

[caption id="attachment_876" align="alignnone" width=""]காவேரி அம்மை: அம்மா மண்டபம்காவேரி அம்மை: அம்மா மண்டபம்[/caption]

ஆடிப்பெருக்கு என்றாலே காவிரிதான். ஆனால், ஆடி 18ஆம் தேதி கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கு விழாவானது பெரும்பாலும் எல்லா நதி தீரங்களிலும் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளைப் போற்ற வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

அரைத்த மஞ்சளை ஒரு செம்பு நீரில் கலந்து, அதை ஆற்று நீரில் கரைத்து, செம்பில் ஆற்று நீர் எடுத்து வந்து விளக்கு பூஜை செய்வர். மேலும், ஆற்றின் படித்துறையில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டு சென்ற உணவுகளை உண்டு மகிழ்ச்சியோடு திரும்புவர்.

மேலும் படிக்க... ஆடி-18 அரங்கன் சீர் பெறும் காவிரி அன்னை!

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

[caption id="attachment_868" align="alignright" width=""]ஆண்டாள்ஆண்டாள்[/caption]ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீதடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்’

வேங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள சுலோகத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக “வைகுண்டம்கூட வேண்டாம்” என்று முடிவு செய்த திருமால், திருமலையில் சுவாமி புஷ்கரணி என்கிற குளத்தின் கரையில் எழுந்தருளினார் என்பது இதன் பொருள். அதேபோல் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் தேவியான பூமிப்பிராட்டி, “வைகுண்ட வான்போகம்கூட வேண்டாம்’ என்று பெரியாழ்வாரின் திருமகளாய், ஸ்ரீஆண்டாளாய், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாள் என்பார் மணவாள மாமுனிகள்.

கலியுகாப்தம். நள வருடம், ஆடி மாதம், எட்டாம் தேதி, வளர்பிறை பஞ்சமி திதியில், செவ்வாய்க் கிழமையன்று, பூர நட்சத்திரத்தில், துலா லக்னத்தில் அவதரித்தாள் ஆண்டாள். தனது தந்தையாராகிய பெரியாழ்வாரையே குருவாகக்கொண்டு கண்ணபிரானிடம் பக்தி செலுத்தி, பரமனாகிய ஸ்ரீரங்கநாதனையே மணவாளனாக அடைந்தாள்.

மேலும் படிக்க... ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

அழகென்ற சொல்லுக்கு முருகா!

தமிழ் மாதங்களில் “ஆடி’க்கும், “மார்கழி’க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். இறைவனின் திருவிழா வைபவங்களுக்கென்றே இரண்டு மாதங்களும் என்பதால், இந்த மாதங்களில் திருமண வைபவத்தைத் தமிழ் மக்கள் நடத்துவதில்லை. அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும்.

மேலும் படிக்க... அழகென்ற சொல்லுக்கு முருகா!

பெரிய திருவடி ஜெயந்தி!

வருகிற 4.8.11ல் கருட பஞ்சமியும், 6.8.11ல் கருட ஜெயந்தியும் அமைகின்றன. காத்தல் தொழிலைக் கொண்ட திருமாலுக்கு வாகனமாய் இருப்பவர் கருடாழ்வார். சுபர்ணன், பன்னகாசனன், புஷ்பப்ரியன், மங்களாயன், சுவர்ணன், புன்னரசு என்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு. இவரின் தாயான வினதையை முன்னிட்டு வைநதேயன் என்றும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுகிறார் கருடாழ்வார். கருட பஞ்சமியும், ஆடி சுவாதியும் கருடாழ்வாரின் அவதார நன்னாட்கள்.

கருட பகவானின் தாயாரான வினதைக்கும், காசியப முனிவரின் மனைவியான கத்ருவுக்கும் எப்போதும் விரோத மனப்பான்மை உண்டு. கத்ருவுக்கு நாகங்கள் பிறந்தன. அவற்றுக்கு கருடன் மீது எப்போதும் பகை எண்ணமே இருந்தன. கருடனும், நாகமும் பகைவர்களாக இருந்தபோதிலும் கருடன் திருமாலுக்கு வாகனமாகவும், ஆதிசேஷன் திருமாலின் அரவணை (படுக்கை)யாகவும் அமைந்தனர்.

மேலும் படிக்க... பெரிய திருவடி ஜெயந்தி!

பட்டர்பிரான் பாதம் பணிவோம்!

திருமால் அடியார்களான ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்கு தனிச் சிறப்பு உண்டு. திருவரங்கனை பெரிய பெருமாள் என்றும், திருவரங்கத்தை பெரிய கோயில் என்றும் (காஞ்சி வரதர் கோயிலுக்கும் பெரிய கோயில் என்ற பெயருண்டு), ஜடாயு மஹாராஜாவுக்கு பெரிய உடையார் என்றும், மணவாள மாமுனிகளுக்கு பெரிய ஜீயர் என்றும் புகழுண்டு. அதேபோல் விஷ்ணு சித்தரான பட்டர்பிரானுக்கும் பெரியாழ்வார் என்ற பெருமை உண்டு.

மேலும் படிக்க... பட்டர்பிரான் பாதம் பணிவோம்!

நரசிம்மருக்கு நாற்பது பாசுரங்கள்!

108 வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது திருவாலி – திருநகரி என்கிற தலம். சீர்காழி- திருவெண்காடு- பூம்புகார் வழித்தடத்தில் சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தத் தலம் லஷ்மிபுரம், ஸ்ரீநகரி, ஆலிங்கனபுரம், பில்வாரண்யக்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் நரசிம்மர். இவர் லெஷ்மி நரசிம்மர், வேதராஜன், வயலாலி மணவாளன் என்ற திருநாமங்களாலும் அழைக்கப்படுகிறார். தாயாரின் திருநாமம் அம்ருதவல்லித் தாயார்.

மேலும் படிக்க... நரசிம்மருக்கு நாற்பது பாசுரங்கள்!

திருவாழியாழ்வான் ஜெயந்தி!

மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனர். இவரே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.

சக்கரத்தானை “திருவாழியாழ்வான்’ என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு “ஹேதிராஜன்’ என்ற திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண’ என்று போற்றுகிறார். அதாவது “திருமாலுக்கு இணையானவர்’ என்று பொருள். சுவாமி தேசிகன் அருளிய சுதர்ஸனாஷ்டகத்தை தினமும் பாராயணம் செய்தால் எண்ணிலடங்காத நன்மைகளை அடையலாம்.

பெரியாழ்வாரும் சக்கரத்தாழ்வாரை “”வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்று வாழ்த்துகிறார். “”சக்கரத்துடன் இணைந்தவரே திருமால்” என்பது நம்மாழ்வாரின் வாக்கு. அவர் திருமாலுக்கு “”சுடராழி வெண்சங்கேந்தி வாராய்” என்று பாமாலை சூட்டுகிறார்.

மேலும் படிக்க... திருவாழியாழ்வான் ஜெயந்தி!
error: Content is protected !!