682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
தானம் – உத்தமமானது!
மனிதன் க்ஷேமம் அடைவதற்கு தர்மத்துக்கு உயர்ந்த இடம் உண்டு. சகல தர்மங்களிலும் உத்தமமான தானம் ஒருவருக்கு ஏதோ ஒன்றை மகிழ்ச்சியுடன் கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல் கொடுப்பது.
ஸாத்விக, ராஜஸிக, தாமஸிக என்று மூன்று வகையான தானங்களில் தகுதியுள்ள மனிதனுக்கு சரியான சமயத்தில், தகுந்த இடத்தில், கொடுப்பது ஸாத்விக தானம். இஷ்டமில்லாமலும் கைமாறு எதிர்பார்த்தும் கொடுப்பது ராஜஸிக தானம். பண்பற்று தாழ்வுபடுத்தும் முறையில் சமயம் இடம் பெறுபவன் தன்மை எல்லாவற்றையும் லக்ஷியம் செய்யாமல் கொடுப்பது தாமஸிக தானம். ஸாத்விகதானம்தான் கொடுக்கப்பட வேண்டும். மற்ற தானங்கள் நிஷித்தம் (பயனற்றது).
தானங்களில் வித்யா தானம் உண்மையில் பெரியது. குரு வித்யயை கொடுப்பதால் மிகவும் மதிப்புக்குரியவர்.
தானமாக கொடுத்த வஸ்துக்கள் உபயோகத்தில் கரைந்து விடுகின்றன. தானம் அளித்த வித்தை அப்படிப்பட்டதல்ல. அது மேலும் வளரும். ஆதலால் தன்னிடம் எள்ளளவில் உள்ள வித்தையை சுலபமாக மற்றவர்களுக்கு அளிக்கலாம். இதுவும் சத்காரியமாகும்.
ஆதிசங்கரர் போன்ற ஞானிகள் உலகத்துக்கு ஞானத்தை தானம் அளித்து அழியாத கீர்த்தி பெற்றிருக்கிறார்கள். அதே மாதிரி பண்டைய காலத்து அரசர்கள் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் விசேஷ இனாம்களை கொடுத்து புகழ் அடைந்து இருக்கிறார்கள்.
தன் சக்திக்கேற்ப தானம் அளித்து எல்லோரும் கீர்த்தி பெறட்டும்.
பாவத்திலிருந்து நரகமும், ஏழ்மையிலிருந்து பாவமும் தானமின்மையிலிருந்து ஏழ்மையும் உண்டாகின்றன. ஆதலால் எல்லோரும் தானம் கொடுக்க வேண்டும்.
நியாயமும் சத்தியமுமே உயர்ந்தது!
மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும். நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய நஷ்டமும், உயிருக்கு ஆபத்தும் கூட வரலாம். ஆனால் எல்லாவற்றையும் விட நியாயமும் சத்தியமும்தான் உயர்ந்தது என்கிற பாவத்தோடு, எடுத்துக்கொண்ட காரியத்தை செய்து முடிக்க வேண்டும்.
கஷ்டங்கள் வரலாம் என்ற காரணத்திற்காக சில மனிதர்கள் எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிக்ககூட மாட்டார்கள். மற்ற சிலர் எடுத்த காரியத்தில் கஷ்டங்களைப் பார்த்து நடுவில் அதை கைவிட்டு விடுவார்கள். ஆனால் உத்தமமான மனிதர்கள் எந்த கஷ்டங்கள் வந்தாலும் எடுத்துக் கொண்ட அந்த நற்பணியை முடித்துவிடுவார்கள். பகவத்பாத சங்கரர் தர்மபிரசார காரியத்தை எடுத்துக் கொண்டார். அதில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தன. அந்த மாதிரி சமயத்தில் மனிதனுக்கு தைரியம் மிகவும் தேவையானது.
பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று வகைப்பட்ட தைரியத்தை பற்றி சொல்கிறார்- ஸாத்விகம், ராஜஸம், தாமஸம். காரியங்களைச் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய கஷ்டத்தை சகிப்பது தான் ஸாத்விகமான தைரியம். அதுதான் மிகவும் தேவையானது. இந்த தைரியத்துடன் காரியத்தை நிறைவேற்றிய மனிதன் எத்தனையோ மனிதர்களுக்கு உபகாரம் செய்தவனாவான். அவனுடைய பெயர் நீண்டகாலம் நிலைக்கும். மகாகவி பாரவி ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்
ஸாஸ்வதமற்ற விலாசத்தை கவனிக்காமல் சாஸ்வதமான கீர்த்தியில் விருப்பம் உள்ளவர்களுக்கு லௌகீகமான சம்பத் என்கிறது ஒரு விஷயமே இல்லை. என்ன கஷ்டங்களிலும் எடுத்துக்கொண்ட நல்ல காரியத்தை செய்து முடித்து, சாஸ்வதமான கீர்த்தியை சம்பாதிக்க வேண்டும்.
சாஸ்வதமான கீர்த்தி
மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும். நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய நஷ்டமும், உயிருக்கு ஆபத்தும் கூட வரலாம். ஆனால் எல்லாவற்றையும் விட நியாயமும் சத்தியமும்தான் உயர்ந்தது என்கிற பாவத்தோடு, எடுத்துக்கொண்ட காரியத்தை செய்து முடிக்க வேண்டும்.
கஷ்டங்கள் வரலாம் என்ற காரணத்திற்காக சில மனிதர்கள் எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிக்ககூட மாட்டார்கள். மற்ற சிலர் எடுத்த காரியத்தில் கஷ்டங்களைப் பார்த்து நடுவில் அதை கைவிட்டு விடுவார்கள். ஆனால் உத்தமமான மனிதர்கள் எந்த கஷ்டங்கள் வந்தாலும் எடுத்துக் கொண்ட அந்த நற்பணியை முடித்துவிடுவார்கள். பகவத்பாத சங்கரர் தர்மபிரசார காரியத்தை எடுத்துக் கொண்டார். அதில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தன. அந்த மாதிரி சமயத்தில் மனிதனுக்கு தைரியம் மிகவும் தேவையானது.
பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று வகைப்பட்ட தைரியத்தை பற்றி சொல்கிறார்- ஸாத்விகம், ராஜஸம், தாமஸம். காரியங்களைச் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய கஷ்டத்தை சகிப்பது தான் ஸாத்விகமான தைரியம். அதுதான் மிகவும் தேவையானது. இந்த தைரியத்துடன் காரியத்தை நிறைவேற்றிய மனிதன் எத்தனையோ மனிதர்களுக்கு உபகாரம் செய்தவனாவான். அவனுடைய பெயர் நீண்டகாலம் நிலைக்கும். மகாகவி பாரவி ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.