திருப்புளியங்குடி

ஸ்ரீ வரகுணமங்கை தலத்தில் இருந்து கிழக்கே 1கி.மீ தொலைவில் உள்ளது. நவதிருப்பதி தலங்களில் மூன்றாவது திருப்பதி. இங்கு எம்பெருமான் காய்சினவேந்தன் என்ற திருநாமத்தில் திகழ்கிறார். புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிய கோலத்தில் வேதசார விமானத்தின் (ச்ருதிஸாரசேகர விமானம்) கீழ் காட்சி தருகிறார்.

பெருமானின் நாபிக் கமலத்தில் இருந்து தாமரைக் கொடியில் தாமரை மீது பிரம்மா அமர்ந்திருக்கிறார். பிராகார வலம் வரும்போது, வடபுறத்தில் இருக்கும் ஜன்னலின் வழியே பெருமானின் திருமுடி முதல் திருவடி வரை நாம் முழுமையும் தரிசிக்கலாம். தாயார் மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளியங்குடிவல்லித் தாயார் ஆகியோர்.

மேலும் படிக்க... திருப்புளியங்குடி

ஸ்ரீ வரகுணமங்கை (நத்தம்)

ஸ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே 2 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் வடகரையில் உள்ளது. நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதி. மூலவர் விஜயாசனப் பெருமாள். விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்கிறார். ஆதிசேஷன் குடைபிடிக்க, கிழக்கு நோக்கி, வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

தாயார்: வரகுணமங்கைத் தாயார், வரகுணவல்லித் தாயார். நம்மாழ்வார் தனது இடர்களை களைவதற்கு எம்பெருமானை வேண்டியபடி, எம்இடர்கடிவான் என அழைத்தார். எனவே, உற்ஸவருக்கு எம்இடர்கடிவான் எனப்பெயர்.

தீர்த்தம்: அக்னி தீர்த்தம், தேவபுஷ்கரணி ஆகியவை. ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம். ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிக அழகு. காளிங்கநர்த்தனர், தசாவதார சிற்பங்கள் கண்களைக் கவர்வன.

மேலும் படிக்க... ஸ்ரீ வரகுணமங்கை (நத்தம்)

ஸ்ரீ வைகுண்டம்

திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள தலம். நவதிருப்பதிகளுள் முதல் திருப்பதி. நவகிரகங்களில் சூரியன் தலம். இந்திர விமானத்தின் கீழ் பெருமான் எழுந்தருள்கிறார். மூலவர் ஸ்ரீவைகுண்டநாதன் ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி தருகிறார். நான்கு கரங்கள், மார்பில் மகாலட்சுமியுடன் உபய நாச்சிமார் இன்றி காட்சி தருகிறார்.

உற்ஸவர் ஸ்ரீ சோரநாதர் (ஸ்ரீ கள்ளபிரான்), ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அருகில் ஸ்ரீவைகுண்ட நாச்சியார், ஸ்ரீ சோரநாத நாச்சியாருடன் அருள்பாலிக்கிறார். தல விருட்சம்- பவளமல்லி. இங்கு பிருகு தீர்த்தம், கலச தீர்த்தம், தாமிரபரணி ஆகிய தீர்த்தங்கள் உள்ளது. 9 நிலையுடன் கூடிய 110 அடி உயர ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது.

மேலும் படிக்க... ஸ்ரீ வைகுண்டம்

மலையப்பனுக்கு மண்சட்டியில் நிவேதனம்

புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக, சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.

இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் கடைபிடிக்கிறார்கள்.

இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை சொல்வர்.

மேலும் படிக்க... மலையப்பனுக்கு மண்சட்டியில் நிவேதனம்

புரட்டாசியில் சிவ வழிபாடு

புரட்டாசி மாதத்தில் சிவபெருமானைப் போற்றும் பௌர்ணமி வழிபாடு மிகச் சிறந்தது. புரட்டாசி மாத உத்திராட பௌர்ணமியன்று மேற்கொள்ளும் சிவ சக்தி வழிபாடு, சகல செüபாக்கியத்தையும் அருளும் என்பர். புரட்டாசி மாதம் பூரட்டாதியில் வரும் இந்தப்…

மேலும் படிக்க... புரட்டாசியில் சிவ வழிபாடு

நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்!

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே சித்திரவாடி கிராமத்தில் அமைந்துள்ளது நயா திருப்பதி என்னும் புண்ணியத் தலம். இதன் அருகில் சிம்மகிரி மலையடிவாரத்தில் “நவகிரக நவ நரசிம்மர் பீடம்’ உள்ளது. மலை உச்சியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி ஸ்ரீநரசிம்ம முக வடிவமைப்புடன் கூடிய நுழைவு வாயிலுடன் வித்தியாசமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க... நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்!

புண்ணியம் தரும் புரட்டாசி

வாழ்வில் ஏற்படும் தடைகளைக் களைய, மூல முதல்வனான விநாயகனின் சதுர்த்தி விழாவோடு தொடங்குகிறோம். அதன் பின்னர் முதலாவதாக வருவது புரட்டாசி சனிக்கிழமைகள்.

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது, மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம். ஒவ்வொரு மாதத்திலும் விரத நாட்கள் இருக்கின்றன. ஆனால் புரட்டாசியோ விரதத்துக்காகவே அமைந்த மாதம்.

மேலும் படிக்க... புண்ணியம் தரும் புரட்டாசி

சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்

சென்னை, செப்.5: சென்னை மந்தைவெளி அருகே ஆர்.ஏ.புரத்தில் உள்ள சிருங்கேரி மடத்தில் ஆவணி 18ம் நாள், செப்.4ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மகா சுதர்ஸன ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், ஸ்ரீஸூக்த ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

மேலும் படிக்க... சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்

சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்

லோக க்ஷேமார்த்த நிமித்தமான ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் சென்ற ஆவணி மாதம் 18ம் தேதி (04.09.2011) ஞாயிற்றுக்கிழமை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சிருங்கேரி மடத்தில் காலை 7 முதல் பகல் 1 வரை…

மேலும் படிக்க... சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்

சிதிலமடைந்த திருவெண்காடர் ஆலயம்!

பொதிகை மலையில் தவமியற்றிய அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து ஒரு துளி நீர் சிந்திச் சிதறியது. அவரின் திருவருளால் அது ராம நதியாக உருவாகி, கடையம் வழியாகப் பாய்ந்து கடனாநதியோடு கலந்தது. இரு நதிகளும் சங்கமிக்கும் அந்த இடத்தில் ஒரு பாறை. இதில் ராமபிரான் அமர்ந்து சந்தியாவந்தனம் செய்தாராம். அதனால் இந்தப் பாறைக்கு “சந்தியாபாறை’ என்று பெயர் ஏற்பட்டது என்பர். இங்கே சங்கு சக்கர வடிவம் உள்ளதால் சக்கரப்பாறை என்றும் அழைப்பர். இந்த மகிமை பொருந்திய இடம்தான் பாப்பான்குளம்.

மேலும் படிக்க... சிதிலமடைந்த திருவெண்காடர் ஆலயம்!
error: Content is protected !!