Varalakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை

ஸ்ரீலக்ஷ்மி

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் வரம் பல அருளும் வரலட்சுமி விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்.

வரலட்சுமி விரதத்துக்கு என்று  புராணக் கதைகள் பல உண்டு.

அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளானாள் தேவர் உலகின் கண தேவதியான சித்ரநேமி. இவள் ஒரு முறை அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டாள். அவர்களிடம் அதுகுறித்து கேட்டாள். அவர்கள் சித்ரநேமிக்கு வர விரதத்தின் பலனைக் கூறினர். அதனை அவளும் அனுஷ்டித்தாள்.  சாப விமோசனம் பெற்றாள்.

மேலும் படிக்க... Varalakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை

ஏழு மலைகள் என்னென்ன?

ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை சொல்லில்…

மேலும் படிக்க... ஏழு மலைகள் என்னென்ன?

பூஜைக்கு உரிய மலர்கள் எவை?

விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் பிள்ளையாருக்கு…

மேலும் படிக்க... பூஜைக்கு உரிய மலர்கள் எவை?

நவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ?

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் நவதிருப்பதி தலங்களுக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

மேலும் படிக்க... நவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ?

இந்த வார விசேஷங்கள்: விழாக்கள்

27-ந்தேதி (செவ்வாய்) * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி புறப்பாடு * மேல்நோக்குநாள் 28-ந்தேதி (புதன்) * நவராத்திரி ஆரம்பம் * அனைத்து ஆலயங்களிலும் நவராத்திரி கொலு ஆரம்பம் * சமநோக்குநாள் 29-ந்தேதி (வியாழன்) * சுவாமி…

மேலும் படிக்க... இந்த வார விசேஷங்கள்: விழாக்கள்

ஆழ்வார்திருநகரி

திருக்கோளூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் மேல் திசையில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். இது நவதிருப்பதிகளுள் ஒன்பதாவது திருப்பதி. நவக்கிரகங்களில் வியாழன் தலம்.

மூலவர் ஸ்ரீ ஆதிநாதப் பெருமான் கோவிந்த விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உற்ஸவர் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் என போற்றி வணங்கப்படுகிறார். ஆதிநாதவல்லித் தாயாரும் குருகூர் வல்லித் தாயாரும் அருள்புரிகின்றனர். இங்கு தல விருட்சமாக புளியமரம் உள்ளது. ஐந்து அடுக்குகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. பிரம்மதீர்த்தம், திருச்சங்கன்னித்துறை ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.

மேலும் படிக்க... ஆழ்வார்திருநகரி

திருக்கோளூர்

தென்திருப்பேரையிலிருந்து தென்மேற்கே 4 கி.மீ தொலைவில் தாமிரபரணி நதிக்கரையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. நவதிருப்பதியில் எட்டாவது திவ்யதேசம். நவகிரகங்களில் செவ்வாய்த் தலமாக விளங்குகிறது. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் அவதரித்த தலம் இதுவேயாகும்.

பார்வதியின் சாபத்தால் குபேரன் தனது நவநிதிகளையும் இழந்தான். மேலும் உருவமும் விகாரம் அடையப் பெற்றான். குபேரன் பார்வதி தேவியை அடிபணிந்து சாப விமோசனம் வேண்டினான்.

மேலும் படிக்க... திருக்கோளூர்

தென்திருப்பேரை

பெருங்குளத்தில் இருந்து தெற்கே சுமார் 11 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் தென் கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். நவதிருப்பதியில் 7வது திருப்பதி. இது ஒரு சுக்கிர பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

மூலவர் மகர நெடுங்குழைக் காதர் (நிகரில்முகில்வண்ணன்). பத்ர விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார் பெருமான். குழைக்காதவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என, தாயார்கள் அருள் புரிகின்றனர். சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம் என்ற இரு தீர்த்தங்கள் உள்ளன.

மேலும் படிக்க... தென்திருப்பேரை

திருக்குளந்தை (பெருங்குளம்)

இரட்டைத் துலைவில்லிமங்கலத்துக்கு வடகிழக்கே 3 கி.மீ தொலைவில் தாமிரபரணியின வடகரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். அருகே பெரியகுளம் ஒன்றும் உள்ளது. சனிக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது. நவதிருப்பதியில் ஆறாவது திருப்பதி.

ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி காட்சி தரும் பெருமான். திருவேங்கடமுடையான் என்ற திருநாமத்தோடு மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்க நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள்.

மேலும் படிக்க... திருக்குளந்தை (பெருங்குளம்)

திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

திருப்புளியங்குடிக்கு தென்கிழக்கே சுமார் 7கி.மீ தொலைவில் தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ளது. இரண்டு திருத்தலங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளதால் இரட்டைத்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. நவதிருப்பதிகளுன் நான்கு மற்றும் ஐந்தாவது திருப்பதி. நவகிரகங்களுள் ராகு, கேதுவுக்கு உரிய தலங்களாக உள்ளன.

இங்கே பெருமான் குமுத விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். நின்றகோலத்தில் மார்பில் லட்சுமி வீற்றிருக்க, ஸ்ரீனிவாசனாக தேவபிரான் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். இங்கே தனியாக தாயாருக்கு சந்நிதி இல்லை. தீர்த்தம் – வருண தீர்த்தம்.

மேலும் படிக்க... திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)
error: Content is protected !!