ஓமாம்புலியூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்

சிவ ஆலயம்

ராமபிரானும், லட்சுமணனும் அங்கு கிடைத்த காட்டுப் பூக்களைக் கொண்டு அந்த சிவலிங்கத்தை பூசித்து வழிபட்டுள்ளனர். அப்போது அருகிலுள்ள கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படவே, சக்கரவர்த்தி திருமகன், ஓர் கணையை வெள்ளத்தில் விடுத்து, நீர்ப்பெருக்கைக் கட்டுப்படுத்தினாராம். ராமபிரான் ஆற்றில் அம்பை எய்து வெள்ளத்தை அடக்கியதால் அந்த ஊருக்கு “எய்த ஊர்’ என்று பெயர் ஏற்பட்டதாம். நாளடைவில் அந்தப் பெயரே மருவி “எய்யலூர்’ என்றானதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

ராமபிரான் பூஜித்த சிவலிங்கம், “சொர்ணபுரீஸ்வரர்’ என்ற பெயரில் இன்றும் அதே இடத்தில் அதே மரத்தின் அடியில் உள்ளது ஒரு பேரதிசயம்! அந்த அபூர்வ மரம், பட்டுப் பட்டுத் துளிர்த்து இன்றும் நிலைத்துள்ளது. மேற்படி மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணம் நடக்கவேண்டியும், உடல் நோய்கள் நீங்க வேண்டியும் தொட்டிலும், கயிறும் கட்டி பிரார்த்தனைகள் செய்கின்றனர் பக்தர்கள்.

தற்போது எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆர்வமுள்ள அன்பர்கள், இக்கட்டுரையாளரை “99625 25944′ என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு சிவப்பணிக்கு உதவலாம்.

செய்தி: தினமணி – வெள்ளிமணி

Leave a Reply