பிறரின் தவறை கூட நாம் எவ்வாறு சுட்டி காட்ட வேண்டும்??

ஆன்மிக கட்டுரைகள்

மனிதர் எவராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் குறைந்தபட்சம் பின்பற்ற வேண்டிய அறநெறி இன்சொல் பேசுதல்.

வள்ளுவரும் இனிமையான சொற்கள் பழத்தைப் போல இருக்கும்பொழுது காயான கடுமையான சொற்களை எதற்காக எடுத்து கையாள்கிறோம் என்று தன் குறளில் குறிப்பிடுகிறார்.

ஏகபத்தினி விரத தீர்க்கும் தர்மத்திற்கும் சத்தியத்திற்கும் உதாரணமாக விளங்கும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இனிமையாக பேசுவதற்கும் உதாரணமாக திகழ்கிறார்.

ஸ்ரீராமர் சித்திரக் கூடத்தில் இருந்த பொழுது நடந்த நிகழ்ச்சி ‘சீதை எதை கொடுத்தாலும் விரும்பி உண்பது ஸ்ரீராமனது வழக்கம்’.

ஒரு நாள் சீதை சமைத்து வட்டு ஸ்ரீராமருக்கு உணவு பரிமாறினாள். பரிமாறிவிட்டு உணவு எப்படி இருக்கிறது என்று கேட்டாள்

ராமர் நன்றாக இருக்கிறது என்று சொல்லி விரும்பி சாப்பிட்டார் இரண்டாவதாக பாரம்பரிய உணவுகளையும் நன்றாக இருக்கிறது என்று சொல்லி சாப்பிட்டார்.

மூன்றாவதாக ஒரு உணவு வகை பரிமாற எடுத்த சீதை சற்று தயங்கினாள் காரணம் அது கொஞ்சம் தீய்ந்து போய் இருந்தது தயங்கியபடியே சீதை இது எப்படி இருக்கிறது என்று கேட்டாள் ராமருக்கோ தர்மசங்கடம். வாய்மை தவறாத சத்ய சந்தர். ஆயினும் மனைவியின் மனதைப் புண்படுத்த  விரும்பாத ராமர் சிரித்துக் கொண்டே நன்றாகத்தான் சமைத்து இருக்கிறாய் ஆனால் அக்னிபகவான் இருக்கிறாரே அவர் தான் இதை சற்று கூடுதலாக தீர்ந்து போகும் படி செய்து இருக்கிறார் என்றார்.

இதைப் போன்று நாம் பேசும் சொற்கள் இனிமையாக இருக்க வேண்டும்.

மற்றவருக்கு உணர்த்த வேண்டியவற்றை கூட மிகவும் இனிமையாக அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

Leave a Reply