வழிபாட்டிற்கு செல்லும்பொழுது கோவில் நடை சாத்தி இருப்பது அபசகுணமா?

ஆன்மிக கட்டுரைகள் ஆலய தரிசனம்

சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்

ஒவ்வொரு ஆலயத்திலும் தரிசனம், ஆலய பூஜை, நைவேத்தியம் ஆகியவற்றிற்கு நேரத்தை ஒதுக்கி பெரும்பாலும் உச்சி பூஜைக்கு பின்னர் 12 மணிமுதல் சாயரட்சை பூஜை ஆரம்பிக்கும் வரை ஆலய நடை சாத்தி இருக்கும்.

இதற்கு காரணம் ஓய்வு என்பது அல்ல. ஒரு காலத்தில் 24 மணி நேரமும் ஆலயம் திறந்திருக்கும். அவ்வப்போது சில அரிய தெய்வ பூஜைகளுக்காக மூலஸ்தானம் சாற்றிி இருக்குமே தவிர முழு நேரமும் கோயில் திறந்து இருந்த காலம் உண்டு. மக்கள் தங்கிடவே மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டன‌. காலப்போக்கில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடை முறை செயல் முறை ஆலயம் சாற்றுகின்ற பழக்கம் ஏற்பட்டுவிட்டது

மனிதனுடைய குணாதிசயம் என்னவென்றால் திடீரென்று ஏதோ எண்ணம் தோன்றி உடனே புறப்பட்டு ஆலயங்களுக்கு தரிசனம் செய்ய தொடங்கி விடுவான். உண்மையில் கொந்தளிப்புகளால் மனம் ஆட்பட்டு இருக்கும் போதெல்லாம் ஆலய தரிசனம் என்பது மனதுக்கு நிறைவையும் சாந்தத்தையும் அளிக்கிறது. இது சத்தியமான வாக்கு.

ஆலயத்தில் உள்ள மகா மண்டபங்களிலும் தீர்த்தக்கரையிலும் எத்தனையோ மகான்களும் சித்த புருஷர்களும் அமர்ந்து உலாவி அவர்களுடைய சக்தியை நிரப்பி செல்கின்றனர் . எனவேதான் ஆலய தரிசனம் என்பது ஆனந்தத்தை அளித்தது. மட்டுமல்லாமல் மனதிற்கு நிரந்தரமான காந்த சக்தியையும் பெற்று தருகிறது கோவிலுக்கு போகும் பொழுது கோயில் நடை சாத்தியிருந்தால் அன்று எடுத்த காரியத்திற்கு அது அபசகுணம் ஆகி விடுமா? என்ற கேள்வி மக்களிடையே எழும்பலாம்.

ஆலயத்தில் நடை சாத்தல் என்ற பழக்கமானது தேவ பூஜையினால் ஏற்பட்டது.

ஆலயங்கள் மனித வழிபாட்டுக்கு மட்டுமல்லாது சிலந்தி பசு வண்டு போன்ற பல உயிரினங்களின் வழிபாட்டிற்காக கோடானு கோடி தேவர்கள் மகரிஷிகள் யோகியர்கள் சித்தர்கள் ஆகியோரின் வழிபாட்டிற்காக ஏற்பட்டது. நடை சாத்தி இருக்கும் பொழுது தேவர்களும் மகரிஷிகளும் தேவபூஜை மேற்கொள்கின்றனர்.

நாம் செல்கின்ற நேரத்தில் நடை சாத்தி இருக்குமேயானால் ஏதோ அதிகாரிகளும் பூசாரிகளும் நடை சாத்தி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்கள் என்று மேலெழுந்தவாரியாக தோன்றும். உண்மையில் கோயிலில் உள்ள பரிபூரணமான தேவ பூஜை நடைபெறுகிறது. இதுவும் தெய்வத்தின் திருவிளையாடல் தான். நம்முடைய பூஜை முறைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் தேவர்களுடைய வழிபாட்டு முறைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தே

பூஜைகள் அனைத்துமே உலக வாழ்க்கையின் உலக ஜீவன்களின் மேன்மைக்காக தேவாதி தேவர்களால் கொண்டாடப்படுவது. ஆனால் தேவாதி தேவர்கள் கூட பல சமயங்களில் தண்டனைக்குப் பிராயச்சித்தமாக பூலோக ஆலயங்களுக்கு வந்து  அவர்களுடைய குறைகளை போக்கிக் கொள்வது உண்டு நம்முடைய புராணங்களில் இந்திரன் சந்திரன் சூரியன் வர்ணன் போன்றவர்கள் பிராயச்சித்தமாக பல ஆலயங்களில் வழிபாட்டுக்குச் என்ற அற்புதமான வைபவங்கள் கொண்ட கோயில்களை நாம் காண முடியும். எனவே நாம் ஆலயத்திற்கு செல்லும் பொழுது கோவில் நடை சாத்தி இருந்தால் அதனை அபசகுனமாக என்னாது தேவ பூஜையின்போது வந்திருக்கின்றோம் என்று பெரிய  பாக்கியமாகவே அதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோயில் நடை சாத்தி இருந்தாலும் தேவபூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மூலஸ்தானம் அது பரம்பொருளின் சக்தி நிரம்பியது.  ஆலயத்தின் தல விருட்சம் தீர்த்தங்களிலும் பரிபூரணமாக அந்த சக்தி நிறைந்து இருக்கிறது. எனவே மூலவரை பார்க்க முடியவில்லை என்று எண்ணம் கொள்ளாது தீர்த்தக் கரையில் நீராடி தல விருட்சத்தை வலம் வந்து கோபுர தரிசனம் செய்தால் தெய்வ தரிசனம் செய்த பலன்களை பெறலாம்.

ஐந்து பத்து நிமிடங்களில் ரயில் ஐயோ ஐயோ பஸ்ஸோ பிடித்து செல்ல வேண்டும் என்று அதிவிரைவு பயணத்தில் ஆலய தரிசனத்தை மேற்கொள்ளாதீர்கள். நிறைய இடங்களில் நாம் நேரத்தை வீணடிக்கிறோம். டிவி பார்ப்பதில், அரட்டை அடிப்பதில், பஸ்ஸுக்காக காத்திருப்பதில், ஹோட்டல்களில், டிக்கட் ரிசர்வ் செய்யும் பொழுது, ரேஷன் கடைகளில், மளிகை கடைகளில்.. இவ்வாறு ஆயிரக்கணக்கான மணி நேரங்களை வீணடிக்ககின்ற மனிதன் கோயிலுக்கு என்றால் அவதி அவதியாக சென்று ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து விடுகிறான். எந்த பரம்பொருளின் கருணையால் ஒவ்வொரு வினாடியும் வாழ்கிறோமோ அந்த இறைவனையே மறந்து அந்த இறைவனுக்காக தன்னுடைய தினசரி வாழ்க்கையில் ஒரு பத்து நிமிடங்கள் கூட ஒதுக்குவது கிடையாது.

காலையில் வாக்கிங் செல்வது நமக்கு நேரம் இருக்கிறது அதில் பேசுவதற்கு நமக்கு நேரம் இருக்கிறது பேப்பர் பார்ப்பதற்கு நமக்கு நேரம் இருக்கிறது டிவி பார்ப்பதற்கு நமக்கு நேரம் இருக்கிறது ஆனால் கடவுளுக்காக நேரம் ஒதுக்குவதற்கு நமக்கு நேரமில்லை இதையே கோயிலில் வலம் வருவதன் மூலமாக வாக்கிங்கை முடித்துக்கொள்ளலாம். கோயிலுக்கு சென்று இறைவனை வலம் வந்தது போலவும் இருக்கும் உடற்பயிற்சியாகவும் இருக்கும். நாயைப் பிடித்துக் கொண்டு நடைப்பயிற்சி என்று பல மணி நேரங்களை வீணடிக்க முடிந்த மனிதனால் கடவுளை காண்பதற்கு கோயிலுக்குச் சென்று நிற்பதற்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது. எல்லாம் அந்த இறைவன் தந்தது அவனுக்கு நன்றி சொல்லவும் மேலும் நம் வாழ்வு சிறக்கவும் அவனுடைய கருணை நமக்கு எப்பொழுதும் கிடைக்க வேண்டும். என்பதற்காக நமக்காக நாம் வழிபடுகிறோம். தவிர இறைவனுக்காக அல்ல. அதனால் வழிபாட்டு முறையை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும் மேலும் கோயில் நடை சாத்தி இருப்பது தேவ காரியங்களுக்காக என்று எண்ணிக்கொண்டு தெய்வத்தை மனதில் இருத்தி தெய்வதரிசனம் கோபுரங்களையும் நதி தீர்த்தங்களையும் தளங்களையும் கண்டு நாம் நிதானமாக கோயிலைப் பற்றிய செய்திகளை அறிந்து ஒரு கோயிலுக்கு சென்று வரும் பொழுது அதன் முழு விவரங்களும் அறிந்தவாறு நாம் நடந்து கொள்வது நேரத்தை ஒதுக்கிக் கொள்வது சிறப்பானது

Leave a Reply