இந்த வார ராசி பலன்கள் : 2011 அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை

விழாக்கள் விசேஷங்கள்

https://www.dinamani.com/edition/astrology.aspx?starname=virgo

கன்னி:

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சிகரமான வாரம். உங்கள் காரியங்களை தனித்துச் செய்து வெற்றியடைவீர்கள். நண்பர்களிடமிருந்து சற்று விலகியே நிற்பீர்கள். கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உழைப்புக்கு ஏற்ற வருமானம் வருவது கடினம். முதியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நலன் தரும். அவசியமான பயணங்களைச் செய்ய நேரிடும். இதனால் நன்மைகளையும் பெறுவீர்கள். வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

உத்யோகஸ்தர்கள் அனைவரிடமும் சுமுகமாகப் பழகவும். புதிய பொறுப்புகளைத் தேடிச் செல்ல வேண்டாம்.

வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குறைந்த முதலீட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதியவர்களை நம்பிக் கடன் கொடுக்க வேண்டாம்.

விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பலனை அடைவதில் தடங்கல்கள் ஏற்படும். ஆகவே குத்தகை எடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்க்கவும்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சிலருக்குக் கட்சியில் புதிய பதவிகள் கிடைக்கும். தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களிடம் எதிர்பார்த்த பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பெண்மணிகள் இல்லத்தில் நிலவும் சூழ்நிலையால் நிம்மதி அடைவீர்கள். குழந்தைகளின் உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும்.

மாணவமணிகள் வெளி விளையாட்டுகளில் ஈடுபடலாம். பெற்றோரால் ஊக்குவிக்கப்படுவீர்கள்.

பரிகாரம்: பெருமாளை தரிசிக்கவும்.

அனுகூலமான தினங்கள்: 21,27

சந்திராஷ்டமம்: இல்லை.

Leave a Reply