கங்கையை நினைந்து… பத்து வித பாபம் போக்க!

விழாக்கள் விசேஷங்கள் ஸ்தோத்திரங்கள்

தசஹரதசமி: தகுதியற்றவர்களுக்கு தானம் அளிப்பது, பிறரை துன்புறுத்துவது, பிற பெண்களை காம எண்ணத்தோடு பார்ப்பது போன்ற உடலால் செய்யும் பாவங்கள்,
கடினமாக பேசுவது, பொய், கோள் சொல்வது, வீண் பேச்சு பேசுவது போன்ற வாக்கினால் செய்யும் தோஷங்கள் ,
பிறர் பொருள் பேல் ஆசைப் படுவது, பிறருக்குத் தீங்கு நினைப்பது, தீய செயல் செய்வதில் விருப்பம் கொள்து போன்ற மனம் தொடர்பான குற்றங்கள்… பச்சாதாபத்தோடு ஶ்ரீகங்கா தசஹரா ஸ்தோத்திரம் படிப்பதால் இந்த பத்துவித பாவங்கள் எந்த ஜென்மத்தில் செய்திருந்தாலும் நீங்கும் என்பார்கள்.

இதனை தசபாபஹரதசமி என்று அழைக்கிறார்கள்.
இன்று கங்கையில் ஸ்நானம் செய்வது சிறந்தது. கங்கையை மனதால் நினைந்து எந்த நீரில் குளித்தாலும் அதே பலன் கிடைக்கும்.

ganga devi

கங்கா நாமங்கள்…

நமோ பகவத்யை தசபாபஹராயை கங்காயை நாராயண்யை ரேவத்யை சிவாயை தக்ஷாயை அம்ருதாயை விஸ்வரூபிண்யை நந்தின்யை தே நமோநம:

ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீம் ஹரசிரசி ஜடாவல்லீ முல்லாசயந்தீ
ஸ்வர்லோகா தாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ
க்ஷோணீப்ருஷ்டேலுடந்தீ துரித சயசமூநிர்பரம் மர்தயந்தீ
பாதோதிம் பூரயந்தீ சுரநகரசரித்பாவநீ ந: புனாது !!

ஶ்ரீ நந்தின்யை நம:

ஶ்ரீ நளின்யை நம:
ஶ்ரீ சீதாயை நம:
ஶ்ரீ மாலின்யை நம: ஶ்ரீ மஹாபகாயை நம:
ஶ்ரீ விஷ்ணு பாதாப்ஜ சம்பூதாயை நம:
ஶ்ரீ கங்காயை நம:
ஶ்ரீ த்ரிபத காமின்யை நம:
ஶ்ரீ பாகீரத்யை நம:,
ஶ்ரீ போகவத்யை நம:
ஶ்ரீ ஜாஹ்னவ்யை நம:
ஶ்ரீ த்ரிதசேஸ்வர்யை நம:

Leave a Reply