682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது
வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் தங்களின் மாங்கல்யத்தை மாற்றிக்கொண்டனர்.
முன்னதாக, மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து பல்லாக்கில் புறப்பட்டார் முருகன்.
அம்மையின் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மகிழ்ச்சியுடன் பல்லாக்கில் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்டார். உடன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரும் மதுரை நோக்கி புறப்பட்டனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல்-29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மதுரையை ஆளும் மங்கையார் அரசிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுந்தரேஸ்வரர் உடன் நாளை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் இங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்டனர். முருகன் வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பைப் பெற்று திருக்கல்யாண வைபோகத்திலும் மாலை பூ பல்லாக்கிலும் நாளை திருத்தேரோட்டத்திலும் பங்கேற்று சனிக்கிழமை இரவு மீனாட்சி அம்மன் கோவிலிலில் விடைபெற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் திருப்பரங்குன்றம் வந்தடைகிறார்.
முருகன் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்படும் போதும் மீண்டும் திரும்பும் போதும் வழி நெடியிலும் பக்தர்கள் அவருக்கு வரவேற்ப்பளிப்பனர்.