சபரிமலை திருநடை இன்று திறக்கப்பட்டது

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

இசக்கிராயர்

91" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2020/05/sabarimala.jpg" alt="" width="1080" height="716" />

சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மூல விக்ரக சிலை பிரதிஷ்டை தினத்திற்காக
இன்றுமாலை 5 மணி அளவில்..

சபரிமலை ஸ்ரீ கோவிலின் #தலைமைபிரம்மஸ்ரீ #தந்திரிகண்டரருமகேஷ் அவர்களின் தலைமையிலும் ஸ்ரீ கோவிலின் #மேல்சாந்தி_AK #சுதீர்நம்பூதிரி அவர்களால் ஸ்ரீ கோவிலின் திவ்ய சுந்தரத் திரு நடையானது திறக்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்ரீ கோவிலானது இரவு 7:30 மணி அளவில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

நாளை காலை சிலை பிரதிஷ்டை தினத்தையொட்டி காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு
#நிர்மால்ய_தரிசனம்..

5:10மணிக்கு #நெய்யபிஷேகம் ..

5:30மணி அளவில் #கணபதி_ஹோமம்..

6:30மணியளவில் #கலச_பூஜை மற்றும் #கலபாபிஷேகத்திற்கு தயார் செய்தல்..!!

7:30மணிக்கு #உஷபூஜை..

9:மணிக்கு #கலபாபிஷேகம் நடைபெற்று 10 மணி அளவில் சபரீச சன்னிதானத்தின் திரு நடை அடைக்கப்படும்..

மீண்டும் மாலை 5 மணிக்கு சபரீசன் சன்னிதானத்தின் திரு நடையானது திறக்கப்பட்டு
மாலை 6:30மணி அளவில் பகவானுக்கு #தீபாராதனை நடைபெற்று…

6:45 மணி அளவில் #அத்தாழபூஜை ஆனது நடைபெறும் ..

#அத்தாழபூஜை முடிந்தபின் பகவானை யோகநிலையில் ஆழ்த்தி 7:30மணி அளவில் #ஹரிவராசனம் பாடி ஸ்ரீ கோவில் நடை அடைக்கப்படும்..!!

Email

Leave a Reply