ஸ்ரீ கோயிலண்ணன் ஸ்வாமி
61" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2010/10/koilannan.jpg" alt="" width="550" height="758" />
ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ கோயில்கந்தாடையண்ணன் திருநட்சத்திரம் – புரட்டாசி பூரட்டாதி
தனியன்
ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம்
வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்யமஹம் பஜே
ஸகல வேதாந்தஸார அர்த்த பூர்ணாஸயம்
விபுல வாதூலகோத்ரோத்பவாநாம் வரம்
ருசிரஜாமாத்ரு யோகிந்த்ர பாதாஸ்ரயம்
வரதநாராயணம் மத்குரும் ஸம்ஸ்ரயே
வாழி திருநாமம்
திருச்சேலை இடைவாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனியுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மாமுனி சீர் பேசும்
மலர்ப்பவளவாய் வாழி மணிமுறுவல் வாழியே
ஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே
அருள்வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே
பேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே
ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன்புகழைப் படைக்க வல்லோன் வாழியே
பகர்வசனபூடணத்தின் படியுடையோன் வாழியே
ஆராமஞ்சூழ்கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே
கோயில் கந்தாடை அண்ணன்
ஆசாரியர்: பெரிய ஜீயர்
சிஷ்யர்கள்: கோயில் கந்தாடை அப்பன், நாயன், பிள்ளை அப்பா
இவர்வாதூல கோத்திரத்தில் முதலியாண்டான் வம்சத்தில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் அவதரித்தார். மாமுநிகள் தம்மிடம் இருந்த அழகிய சிங்கர் விக்கிரகத்தை திருவாராதனப் பெருமாளாக இவருக்கு அளித்தார். இவருடைய பால்ய வயதிலேயே இவருடைய திருத்தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பா பரமபதம் அடைந்தார். அதனால் கோவிலில் இவர் வம்சத்தாருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதைகள் கிடைக்கவில்லை. எம்பெருமானார் இவர் கனவைல் தோன்றி மாமுனியை ஆச்ரயிக்கும்படி தெரிவித்தார். மாமுனிகள் இந்த வம்சத்தாருக்கு மீண்டும் மரியாதைகள் கிடைக்கும்படி ஏற்பாடுகளைச் செய்தார். மேலும் கீழ உத்தரவீதியில் இருந்த 16 கல் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்தார். வேண்டும்போது பண உதவிகளையும் செய்தார். இவர் மாமுனிகளின் பெருமையைக் கூறும் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் 13 பாசுரங்கள் கொண்ட நூலையும் இயற்றினார். மேலும் வரவரமுநி அஷ்டகம், ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா என்னும் நூல்களையும் செய்தருளினார். மணவாளமாமுனிகளின் உபதேசரத்ன மாலைக்கு கீழ்க்காணும் தனியனை அருளிச் செய்தார்.
முன்னந் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியைத் தணவாத சொல் மணவாளமுனி
தன்னன்புடன் செய் உபதேசரத்தின மாலைதன்னை
தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே
இவர் உத்தம நம்பி, எரும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளார் ஆகியோரையும் மாமுனிகளிடம் ஆச்ரயிக்கச் செய்தவர். இவர் கந்தாடையப்பன், திருகோபுரத்து நாயனார், சுத்தசத்வம் அண்ணன், திருவாழி ஆழ்வார்பிள்ளை, கந்தாடை நாயன், ஜீயர் நாயனார், ஆண்டபெருமாள் நாயனார், ஐயன் அப்பா ஆகிய ஸ்வாமிகளை தம்முடைய அஷ்டதிக்கஜங்களாக நியமித்தார்.
மாமுனிகள் இவருடைய ஆசார்யனுக்குரிய நியம நிஷ்டைகளைக் கண்டு இவருகு பகவத் சம்பந்தாசார்யர் என்று விருது கொடுத்து அழைத்தார்.
நம்பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் என்ரு அருளப்படிட்டார். காஞ்சிப் பேரருளாளர் இவருகு ஸ்வாமி அண்ணன் என்று அருளப்பாடிட்டார்.
புரட்டாசி மாதத்துக்கு ஒரு தனி விசேஷம் உண்டு. இம்மாதத்தில்தான் திருவேங்கடமுடையான், வேதாந்தாசார்யர் (தூப்புல் பிள்ளை), ஸ்ரீகோயில் கந்தாடையண்ணன், ஒன்றான வானமாமலை ராமானுஜ ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்), ஆகியோர் திருவவதாரம் செய்தார்கள். மாமுனிகள் ஸ்ரீகோயில் கந்தாடையண்ணனையும் ஒன்றான வானமாமலை ராமானுஜ ஜீயரையும் தம்முடைய அஷ்டதிக் கஜங்களாக நியமித்தார். மாமுனிகள் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான ஸ்ரீப்ரதிவாதி பயங்கரம் அண்ணா, வேதாந்தாசார்யருடைய திருக்குமாரரான நயநவரதாசாரியர் சிஷ்யர் ஆவர்.
இந்த மாதத்தில் அவதரித்த மேற்கண்ட இந்த இரு ஆசார்யர்கள்லும் மாமுனிகளின் சிஷ்யர்களாகத் திகழ்ந்தவர்கள். ஸ்ரீஎரும்பியப்பாவும் ஸ்ரீப்ரதிவாதிபயங்கரம் அண்ணாவும் தங்களுடைய பிரபந்தங்களான வரவரமுநி சதகங்களில் இவருடைய மேன்மையையும் பெருமையையும் எடுத்துக் கூறியுள்ளனர்.
மாமுனிகள் இறுதிக்காலத்தில் இவர் திருக்கரங்களினால் செய்த தளிகையை விரும்பி உகந்து அமுதுண்டு மகிழ்ந்தார்.
இவர் விபவ வருடம் கி.பி. 1448 சித்திரை மாதம் கிருஷ்ண பட்ச திருதியை அன்று ஆசார்யன் திருவடி அடைந்தார்.
ஸ்ரீசிறுபுலியூர் சுத்தசத்வம் அண்ணன்ஸ்வாமி வாழிதிருநாமம்:
ஆடியோ கோப்பு:
வாழிதிருநாமம் – முதல் பகுதி:
{play}modules/mod_mp3player/annanswami_vazhithirunamam1.mp3|[AUTOPLAY]{/play}
வாழி திருநாமம் – இரண்டாம் பகுதி:
{play}modules/mod_mp3player/annanswami_vazhithirunamam2.mp3|{/play}
வாழிதிருநாமம் – மூன்றாம் பகுதி:
{play}modules/mod_mp3player/annanswami_vazhithirunamam3.mp3|{/play}