இன்று… சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ தீர்த்த ஸ்வாமிகளின் வர்தந்தி உத்ஸவம்!

கட்டுரைகள் சமயாசார்யர்கள் விழாக்கள் விசேஷங்கள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

இன்றைய தினம் தக்ஷிணாம்னாய ஶிருங்கேரி ஶாரதா பீடாதிபதி ஸன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுஶேகரபாரதீ ஸ்வாமிகளின் வர்த்தந்தி (பிறந்தநாள்) மகோத்ஸவம். பவித்ரமான சிருங்கேரியில் வைத்து நடைபெறுகிறது …

May be an image of 1 person, temple and text

ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் அருளுரை:

சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது ஒன்றும் இன்பமயம் அல்ல. பிறகு அவைகளை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டும் : அதுவும் இன்பம் தரக்கூடிய காரியம் இல்லை. ஏதேனும் ஒரு காரணத்தினால் கஷ்டப்பட்டு சேகரித்த உடைமைகள் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டால், இருந்த கொஞ்ச நஞ்ச இன்பமும் போய், முடிவில் வேதனைதான் மிஞ்சும்.

ஆகவே உடைமைகளுக்கு ஆசைப்படுவது நல்லதில்லை. பழங்காலத்தில் வனத்தில் இருந்த ரிஷிகளுக்கென்று சொந்தம் ஏதும் கிடையாது. ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லையா என்ன? திருப்தி என்ற ஒன்றினால் தான் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள்.

புராணங்கள் பரம சிவபெருமானை ஒரு காளையின் மீது அமர்ந்து இருப்பவராகவும் புலித்தோலை உடுத்தி இருப்பவராகவும் மற்றும் உடலில் விபூதி பூசி இருப்பவராகவும் வர்ணிக்கின்றன. நாம் இந்த்ரியஸுகங்களிலிருந்து மனதை மறக்க வேண்டும் என்பது இதன் தாத்பரியம். நாம் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும் எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு இன்பம் கிடைக்கும்.

தனம் தானாகவே வந்தால் அதை நல்ல அல்லது தார்மீக காரியங்களுக்காக உபயோகப்படுத்தி வாழ்க்கையை சமநிலையில் நடத்தி வரவேண்டும். “இவ்வுலகில் யார் பணக்காரன், யார் ஏழை” என்ற கேள்விக்கு பதில் உண்டு. ஆசைகளற்றவனும் திருப்தி நிரம்பிய மனதுள்ளவனும் தான் பணக்காரன். இந்த குணம் இல்லாத மற்ற எல்லோரும் உண்மையில் ஏழைகள்.

ஆதலால் திருப்தி என்ற லக்ஷியத்தை உயர தாங்கி, இன்பத்துடன் செழிப்பாக வாழ்வது மிக்க நல்லது.


<

p class=”dropcapp2″>மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும். நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய நஷ்டமும், உயிருக்கு ஆபத்தும் கூட வரலாம். ஆனால் எல்லாவற்றையும் விட நியாயமும் சத்தியமும்தான் உயர்ந்தது என்கிற பாவத்தோடு, எடுத்துக்கொண்ட காரியத்தை செய்து முடிக்க வேண்டும்.

கஷ்டங்கள் வரலாம் என்ற காரணத்திற்காக சில மனிதர்கள் எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிக்ககூட மாட்டார்கள். மற்ற சிலர் எடுத்த காரியத்தில் கஷ்டங்களைப் பார்த்து நடுவில் அதை கைவிட்டு விடுவார்கள். ஆனால் உத்தமமான மனிதர்கள் எந்த கஷ்டங்கள் வந்தாலும் எடுத்துக் கொண்ட அந்த நற்பணியை முடித்துவிடுவார்கள். பகவத்பாத சங்கரர் தர்மபிரசார காரியத்தை எடுத்துக் கொண்டார். அதில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தன. அந்த மாதிரி சமயத்தில் மனிதனுக்கு தைரியம் மிகவும் தேவையானது.

பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று வகைப்பட்ட தைரியத்தை பற்றி சொல்கிறார்- ஸாத்விகம், ராஜஸம், தாமஸம். காரியங்களைச் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய கஷ்டத்தை சகிப்பது தான் ஸாத்விகமான தைரியம். அதுதான் மிகவும் தேவையானது. இந்த தைரியத்துடன் காரியத்தை நிறைவேற்றிய மனிதன் எத்தனையோ மனிதர்களுக்கு உபகாரம் செய்தவனாவான். அவனுடைய பெயர் நீண்டகாலம் நிலைக்கும். மகாகவி பாரவி ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்

ஸாஸ்வதமற்ற விலாசத்தை கவனிக்காமல் சாஸ்வதமான கீர்த்தியில் விருப்பம் உள்ளவர்களுக்கு லௌகீகமான சம்பத் என்கிறது ஒரு விஷயமே இல்லை. என்ன கஷ்டங்களிலும் எடுத்துக்கொண்ட நல்ல காரியத்தை செய்து முடித்து, சாஸ்வதமான கீர்த்தியை சம்பாதிக்க வேண்டும்.

தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்

Leave a Reply