பாஞ்சராத்ர தீபம் ! விஷ்ணு கார்த்திகை!

ஆன்மிக கட்டுரைகள்
karthigai deepam - Dhinasari Tamil

பாஞ்சராத்ர தீபம் !

இறைவழிபாட்டில் தீபங்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. தீபங்களில் பல வகைகள் உள்ளன. தீப ஏற்றுவதிலும் பல முறைகள் பின்பற்றப் படுகின்றன.

தீபமேற்றும் முறைகள் பத்து: தரையில் வரிசையாக தீபங்கள் ஏற்றுதல். தரையில் கோலம் போட்டு வட்டமாக ஏற்றுதல். சித்திர தீபம்.மாலா தீபம். அடுக்கு தீபம். ஆகாச தீபம். ஜல தீபம் (நீரில் விளக்குகளை மிதக்க விடுதல்) நௌகா தீபம் (படகு போன்று செய்து பெரிய தீபமாக ஏற்றி நீரில் மிதக்க விடுதல்) கோபுர தீபம் (கோயில் கோபுரங்களின் மீது ஏற்றுதல்) ஸர்வ தீபம் (இல்லங்களில் முழுவதும் தீபங்கள் ஏற்றுதல்).

தீபங்கள் பதினாறு: தூபம், தீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருஷப தீபம், புருஷாமிருக தீபம், சூல தீபம், கமடதி (ஆமை) தீபம், கஜ (யானை) தீபம், வியாகர (புலி) தீபம், சிம்ஹ தீபம், துவஜ (கொடி) தீபம், மயூர (மயில்) தீபம், பூரண கும்ப தீபம் (ஐந்து தட்டு), நட்சத்திர தீபம், மேரு தீபம்.

விஷ்ணு கார்த்திகை: “பாஞ்சராத்ர தீபம்’ என்ற பெயரில் விஷ்ணு கோயில்களில் கார்த்திகை தீபத்திருவிழா மூன்று நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி மூன்று நாள்களும் “சொக்கப்பனை’ எரிக்கும் வழக்கம் உண்டு.

ஒருமுறை கலைமகளுக்கு தெரியாமல் பிரம்மன் யாகம் ஒன்றினை நடத்தினார். அதனால் கோபம் கொண்ட கலைமகள், பிரம்மனின் யாகத்தை அழிக்க ஓர் அரக்கனை ஏவினாள். அரக்கன் யாகத்தைத் தடுக்க உலகம் முழுவதும் இருள் சூழும்படி செய்தான்.

இதனால் பிரம்மனின் யாகத்திற்கு தடை ஏற்படும் நிலை ஏற்பட்டது. உடனே, பிரம்மன், மஹாவிஷ்ணுவை வேண்டினார். மஹாவிஷ்ணு ஜோதியாய் ஒளிர்ந்து உலகத்தில் சூழ்ந்த இருளை அகற்றினார்.

மஹாவிஷ்ணு ஒளிகொடுத்த இந்த நிகழ்ச்சி நடந்தது, “ஒரு கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திர தினத்தன்று’ என்பதால் அதனைக் கொண்டாடும் வகையில் விளக்கேற்றி வைணவர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஓம் நமோ நாராயணாய !

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply