சிவபெருமானுக்கு… இவற்றால் அபிஷேகம் செய்தால்… இந்த பலன்கள் கிட்டும்!

ஆன்மிக கட்டுரைகள்

சிவபிரானுக்கு எவற்றால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்?

அருகம்புல் நீரால் அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் அபம்ருத்யு விலகிப்போகும்.

பசும்பால் அபிஷேகம் செய்தால் சகல சௌக்கியங்களையும் பெறலாம்.

தயிரால் அபிஷேகம் செய்தால் பலம், ஆரோக்கியம், யசஸ்ஸு கிடைக்கும்.

பசு நெய்யால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிடைக்கப்பெறும்.

கரும்பு ரசத்தால் அபிஷேகம் செய்தால் தனவிருத்தி கிடைக்கும்.

பொடியான சக்கரையால் அபிஷேகம் செய்தால் துக்கம் நாசமாகும்.

வில்வ இலை ஜலத்தால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் கிடைக்கும் .

தேனால் அபிஷேகம் செய்தால் தேஜஸோடு பிரகாசமாக விளங்குவோம்.

புஷ்பங்களை நனைத்து தண்ணீரால் அபிஷேகம் செய்தால் பூமி, நிலம், லாபம் பெறலாம் .

இளநீரால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்துகளும் கிடைக்கப் பெறுவோம்.

ருத்ராட்ச ஜலத்தால் அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

பாலபிஷேகம் செய்தால் மகா பாவங்கள் தொலையும்.

சந்தன நீரால் அபிஷேகம் செய்தால் சத் புத்திர பிராப்தி கிடைக்கும்.

தங்கத்தை நீரில் நனைத்த அந்த நீரால் அபிஷேகம் செய்தால் கோரமான தரித்திரம் விலகிப்போகும்.

சுத்தமான நீரால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்பப் பெறலாம்.

  • அன்ன அபிஷேகத்தால் அதிகாரப் ப்ராப்தி, மோக்ஷம் மற்றும் தீர்காயுள் கிடைக்கும்.
  • சிவபூஜையில் அன்ன லிங்கார்ச்சனைக்கு பிரதானமான முக்கியத்துவம் உள்ளது .
  • தயிர் கலந்த அன்னத்தை சிவலிங்கத்துக்கு முழுமையாக பூசி பூஜை செய்வார்கள்.
  • சிவலிங்கத்தின் மேல் அமைத்த அன்னத்தை பிரசாதமாக பூஜைக்கு பிறகு விநியோகிப்பார்கள்.
  • பார்ப்பதற்கு மிக மிக அழகாக இருக்கும் அன்ன லிங்க அர்ச்சனை .

அடுத்து … திராட்சை ரசத்தால் அபிஷேகம் செய்தால் ஒவ்வொன்றிலும் வெற்றி கிடைக்கும்.

பேரிச்சம் பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் பகைவர்களின் தீமை விலகும்.

நாகப்பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய சித்தி கிடைக்கும்.

கஸ்தூரி கலந்த நீரால் அபிஷேகம் செய்தால் சக்கரவர்த்தி ஆகலாம்.

நவரத்னங்கள் நனைத்த நீரால் அபிஷேகம் செய்தால் தான்யம், இல்லம், பசுக்கள் அபிவிருத்தி கிடைக்கும் .

மாம்பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் தீர்க்க வியாதிகள் தொலையும்.

மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்தால் மங்களம் மங்களம் மங்களம் சுப காரியங்கள் எல்லாம் நிகழும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply