682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

தென்காசியில் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மே8ஆம் தேதி நடைபெறும் என திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட சபரிமலை, ஆரியங்காவு, அச்சன்கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் செய்ய வேண்டிய திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தலைமையில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
மே 8ஆம் தேதி வியாழக்கிழமை காலை ஆரியங்காவு திருக்கோவிலிலும் பிற்பகல் அச்சன்கோவில் திருக்கோவிலிலும் இந்த ஆய்வுக் கூட்டம் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தலைமையில் நடக்கிறது
வியாழக்கிழமை அன்று மாலை தென்காசியில் திருஆபரணபெட்டி வரவேற்பு கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் மாலை 5 மணிக்கு தென்காசி ரயில்வே ரோடு ஜெகநாத் அரங்கத்தில் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தலைமையில் நடைபெறுகிறது.
இத்தகவலை தெரிவித்துள்ளார் அச்சன்கோவில் திருஆபரணபெட்டி தமிழக பொறுப்பாளரும்.. திருஆபரணபெட்டி கோஷயாத்தியின் கேரள ரக்சாதிகாரியுமான தென்காசி ஏ.சி.எஸ்.ஜி. ஹரிஹரன் குருசாமி.
கேரளா தேவசம் போர்டு தலைவர் தென்காசியில் ஒரு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறை.
எனவே அச்சன்கோவில் திருஆபரணபெட்டி வரவேற்பு கமிட்டி உறுப்பினர்கள் ஐயப்ப பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சபரிமலை மற்றும் அச்சன்கோவில் திருக்கோவில்களில் செய்ய வேண்டிய திருப்பணிகள் மற்றும் வசதிகள் குறித்த ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.