தீபாவளிக்கு வெடியும் பட்டாசும் ஏன்? இன்று மறக்காம இதைச் செய்யுங்க!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

e0aebfe0ae95e0af8de0ae95e0af81-e0aeb5e0af86e0ae9fe0aebfe0aeafe0af81e0aeaee0af8d-e0aeaae0ae9fe0af8d.jpg" style="display: block; margin: 1em auto">

04 Nov02 Diwali
04 Nov02 Diwali
04 Nov02 Diwali

தீபாவளி என்றாலே வெடியும் பட்டாசும் மத்தாப்பும் என ஒளியின் வெள்ளத்தில் இரவை போக்குவது மரபாக இருந்து வருகிறது… ஆனால் ஏன் தீபாவளி அன்று மட்டும் இப்படி வெடிகளும் பட்டாசு கொளுத்தி பண்டிகையை கொண்டாடுகிறோம்?

பலரும் புத்தாடை அணிந்து வெளியே வந்து வெடிகளும் பட்டாசும் போடுவது பண்டிகையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் என்றும், நரகாசூரன் கதையை சொல்லி அவன் கேட்ட வரத்தின்படி மகிழ்ச்சியாக இருப்பது பண்டிகையின் உள்ளர்த்தம் என்றும் சொல்வார்கள்… ஆனால் தீபாவளி பண்டிகையின் உள்ளர்த்தமே வேறு!

புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள், மகாளய பட்சம் எனப்படும். அந்நாட்களில், முன்னோர்கள் தம் சந்ததியரைக் காணவும், அவர்கள் கரங்களால் தங்களுக்கான உணவாக எள்ளும் தீர்த்தமும் பெற்று திருப்தி பெற்றுச் செல்வார்கள் என்பது ஹிந்து மதத்தினரின் வழி வழி நம்பிக்கை.

அவ்வாறு வரும் முன்னோர்கள் / பிதுர்க்கள், தீபாவளி அன்று யமலோகம் / பிதுர்லோகத்துக்கு திரும்பிச் செல்வார்கள் என்றும், அந்த ஆன்மாக்களுக்கு இருள் நீங்கி ஒளியுடன் கூடிய வழியைக் காட்டவே தீபங்களை ஏற்றி வைத்து, ஒளி மிகுந்த பட்டாசு, வெடிகளை வெடித்து, மத்தாப்பு கொளுத்தி வழி அனுப்பி வைக்கிறோம் என்பார்கள்.

புரட்டாசி மாத மகாளயபட்ச அமாவாசைக்கும், ஐப்பசி மாத அமாவாசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த இரு காலங்களிலும் யம தர்ப்பணம் செய்வது வழி வழியாகக் கடைப்பிடித்து வரும் பழக்கமும் கூட! யம தர்ப்பணம் செய்வதுடன் யம தீபம் ஏற்றுவதும் வழக்கத்தில் உள்ளது.

யம தீபம் ஏற்றுவது ஏன் என்ற சந்தேகத்துக்கான விடை இது…

தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி திதி அன்று நம் வீட்டுக்கு மகா லட்சுமி வருவதாக ஐதீகம். இந்த வருடம் [ 2021 ] யம தீபம் ஏற்ற வேண்டிய நாள் = இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.41 மணி முதல் 6.58 மணி வரை.

இன்று காலை திருக்கணித பஞ்சாங்கம் படி 11 . 40 AM திரயோதசி திதி தொடக்கம்..!! எனவே யம தீபம் ஏற்ற சரியான நாள் திரயோதசி திதி ! இந்த நாள் யம தர்மராஜனுக்கும் முக்கியமான நாள் கூட..

மஹாளய பட்ச நாட்களில் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வந்த முன்னோர்கள் , மீண்டும் பித்ரு லோகத்துக்கு திரும்ப செல்லும் நாள் இது..!! அப்படி திரும்பி போகின்ற பித்ருக்களுக்கு வழி தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் யம தீபம் ஏற்றப் படுகிறது.

diwali mathappu
diwali mathappu

இந்த தீபத்தை வீட்டின் தெற்கு திசை நோக்கி உயரமான இடங்களில் ஏற்றுவது மிகவும் சிறப்பு. வசதி இல்லாதவர்கள் வீட்டில் பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்கோடு சேர்த்து ஒரு அகல்தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றினாலே போதுமானது.

அதுவே, எம தீபம்!! இதை உங்கள் வீட்டிலும் , உங்கள் தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும் ஏற்றலாம். இப்படி தீபம் ஏற்றுவதினால் விபத்துகள், திடீர் மரணங்கள் சம்பவிக்காது. நோய் நொடி அண்டாது என்பது நமது இந்து சாஸ்திர நம்பிக்கை.

கீழே உள்ள யம தர்ம ராஜாவுக்கு உண்டான மந்திரத்தை பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு.

ஸ்ரீ யமாய நம:
யமாய தர்மராஜாய ம்ருத்யவே ச அந்தகாய ச
வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச
ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை நம: ஓம் நம இதி:

tharpanam
tharpanam

தீபாவளி அன்று யம தர்ப்பணம் தெரியுமா!

தீபாவளியன்று யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும். அன்று காலை ஸ்நானம் சந்தியா வந்தனம் முடித்துவிட்டு, காலை 7 மணிக்குள் கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டு

ஆஸ்வயுஜ க்ருஷ்ண பக்ஷ சதுர்தசீ புண்ய காலே யமதர்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து கொண்டு பூணல் வலம் , மஞ்சள் கலந்த சோபன அக்ஷதையால் / சாதாரண அரிசி அட்சதையால் சுத்த ஜலத்தால் தர்பணம் செய்யவும். பூணல் இடம் கிடையாது. எள் கிடையாது.

ஜீவத் பிதாபி குர்வீத தர்பணம் யம பீஷ்ம யோஹோ என்னும் வசனப்படி தந்தை இருப்பவர்கள் தந்தை இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்ய வேண்டும்.

யமாய நம: யமம் தர்பயாமி;
தர்மராஜாய நம: தர்மராஜம் தர்பயாமி;
ம்ருத்யவே நம: ம்ருத்யும் தர்பயாமி[;
அந்தகாய நம: அந்தகம் தர்பயாமி;
வைவஸ்வதாய நம: வைவச்வதம் தர்பயாமி.;
காலாய நம; காலம் தர்பயாமி;
ஸர்வபூத க்ஷயாய நம; ஸர்வபூத க்ஷயம் தர்பயாமி;
ஒளதும்பராய நம; ஒளதும்பரம் தர்பயாமி;
தத்னாய நம; தத்னம் தர்பயாமி;
நீலாய நம: நீலம் தர்பயாமி:
பரமேஷ்டிநே நம: பரமேஷ்டிநம் தர்பயாமி;
வ்ருகோதராய நம: வ்ருகோதரம் தர்பயாமி;
சித்ராய நம: சித்ரம் தர்பயாமி;
சித்ர குப்தாய நம: சித்ரகுப்தம் தர்பயாமி;

என்று யம தர்பணம் செய்துவிட்டு தெற்கு நோக்கி நின்று கொண்டு கீழ்க்காணும் ஸ்லோகம் சொல்லவும்.

யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோ தண்டதரஸ் ச காலப்ரேதாதி ப்ரோத்த்த க்ருதாந்த காரி க்ருதாந்த ஏதத் தச க்ருத் ஜபந்தி
நீல பர்வத சங்காச ருத்ர கோப ஸமுத்பவ காலதண்டதர, ஶ்ரீமன் வைவஸ்வத நமோஸ்துதே

என்று, யம தர்மராஜாவை ப்ரார்தித்து கொள்ளவும்.

இதனால் பாபங்கள் விலகும், அகால மரணம் ஏற்படாது. எல்லா வியாதியும் விலகும். யம பயம் வராது… என்பது ஐதிகம்.

தீபாவளிக்கு வெடியும் பட்டாசும் ஏன்? இன்று மறக்காம இதைச் செய்யுங்க! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply