பகவத்பக்தர்கள் பாகவதர்கள் முனிசிரேஷ்டர்கள் ஜீவன்முக்தர்கள் “எவ்வளவு வசதிகள் இருந்தாலும் எனக்கு அது தேவையில்லை. ஈச்வர ஸக்ஷாத்காரம் தான் வேண்டும்” என்பது அவர்களின் லட்சியமாக இருந்தது. அதேபோல் அவர்கள் பகவானின் பாதத்தை 24 மணி நேரமும் தியானித்தார்கள்.
நாமும் தியானம் பண்ணுகிறோம். எதன் மீது ? த்யாதம் வித்தமஹர்னிசம் 24 மணி நேரமும், “பணம் எப்படிச் சேர்ப்பது? அதை எப்படி இரட்டிப்பாக்குவது?” என்று பணத்தைப் பற்றியே நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தக் காரணங்களால்தான் அவர்கள் பெற்ற பலனை நாம் பெறவிடாமல் தடுக்கின்றன. தத்தத்கர்ம க்ருதம் யதேவ முனிபிஸ்தைஸ்தைர்பலைர்வஞ்சிதா: நம்முடைய ஸாதனை வழிக்கும் அவர்களது ஸாதனைக்கும் எவ்வளவோ வேறுபாடு!
ஆகவே, நாமும் அவர்களுடைய வழியைப் பின்பற்ற வேண்டும். மனதிலேயுள்ள ஆசைகளுக்காக பகவானை வழிபடுவது சரியில்லை. ஆசைகளைப் போக்கிக் கொண்டால்தான் உண்மையான சுகத்தை அடைய முடியும்.
வருகின்ற ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள முயறிசிப்பதில் நாம் வெற்றியடைய முடியாது. ஆசைகள் தீராமல் வருத்தம்தான் மிஞ்சும். ஆசை யாருக்கும் இன்பம் சேர்க்காது.