-e0aeb5e0aeb0e0aeaee0af8d-e0aea4e0aeb0e0af81e0aeaee0af8d-e0ae95e0aeb2e0af8de0aeafe0aebee0aea3.jpg" style="display: block; margin: 1em auto">
அரங்கனுக்கு கிளியைக் கொண்டு தூது அனுப்பினாள் ஆண்டாள்!
தூது சென்றுவந்த கிளியிடம், உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, கிளியும் “அம்மா!உங்கள் திருக்கரத்தில் நான் என்றும் இருக்க அருள்புரிய வேண்டும் என்று கேட்டதற்கு இணங்க, ஆண்டாள் திருக்கரத்தில் கிளி எப்பொழுதும் இருப்பதாக ஐதீகம்!*
அரங்கனிடம் தூது சென்றதால் இந்த கிளிக்கு “கல்யாணக் கிளி” என்று பெயர்!
இதை இன்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில், பிரத்யேகமாக தினமும் ஒரு கிளி சமர்ப்பிக்கிறார்கள்.
இந்த கிளி செய்வது ஒரு தனிக்கலை! சுத்தமான வாழைநார் மற்றும் மரவள்ளிக் கிழங்கின் இலைகளைக் கொண்டு கிளியின் உடலும் முகமும் வடிவமைப்பர்.
நந்தியாவட்டை என்ற பூவின் செடியிலுள்ள இலைகளை கிளியின் இறக்கைகளுக்கு பயன்படுத்துவர்.
கிளியின் கண்கள் பளிச்சிட காக்காய் பொன் என்ற பொருளையும், சிகப்பு நிற மாதுளம்பூ கிளியின் மூக்கிற்கும் பயன்படுத்துவர்.
ஒரு கிளி தயார் செய்ய குறைந்தது மூன்று மணி நேரமாகுமாம்.
ஆண்டாளுக்கு சாற்றிய இந்த கிளியை பூஜை அறையில் வைத்து “வாரணமாயிரம்” பாசுரம் அநுசந்திக்க, திருமணமாகதவர்க்கு திருமணத்தடை நீங்கி சுபமுகூர்த்தம் விரைவில் கூடும் என்பது ஐதீகம்
திருமண வரம் தரும் கல்யாணக் கிளி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.