e0aeaae0aeb5-e0ae8ee0aea9e0af81e0aeaee0af8d-e0ae92e0aeb0e0af81-e0aeaee0aea8e0af8de0aea4e0aebfe0aeb0e0aea4.png" style="display: block; margin: 1em auto">
சரவணபவன்’ என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள். ‘சரவணபவ’ மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது. முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.
சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்
‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரம் மிகவும் சிறப்பானதாகும்.
விளக்கம் 1
ச … செல்வம்
ர … கல்வி
வ … முக்தி
ண … பகை வெல்லல்
ப … கால ஜெயம்
வ … ஆரோக்கியம்
விளக்கம் 2
சரவணபவன் … நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன்.
விளக்கம் 3
ச … மங்களம்
ர … ஒளி கொடை
வ … சாத்துவிகம்
ண … போர்
பவன் … உதித்தவன்
விளக்கம் 4
ச (கரம்) … உண்மை
ர (கரம்) … விஷய நீக்கம்
அ (வ) (கரம்) … நித்யதிருப்தி
ண (கரம்) … நிர்விடயமம்
ப (கரம்) … பாவநீக்கம்
வ (கரம்) … ஆன்ம இயற்கை குணம்
விளக்கம் 5
ச = லட்சுமி;
ர = கலை மகள்;
வ = போக மந்திரம்;
ந = சத்துரு நாசம்;
ப = மித்ரு செயம்;
வ = நோயற்ற வாழ்வு.
என ஒவ்வோர் எழுத்திற்கும் இவ்வாறு பொருள் கூறுவதும் உண்டு.
இதனை மனமுருகிச் சொல்பவர்கள் செல்வம், கல்வி முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது
சரவணபவ எனும் ஒரு மந்திரத்தை.. கூறிவதால் வரும் பலன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.