e0af88.jpg" style="display: block; margin: 1em auto">
எம்பெருமான் நாராயணன் எத்தனையோஅவதாரங்கள்
செய்தருளினால், அவைகளில்
பத்து அவதாரங்கள்
மிகவும் போற்றப்படுகின்றன
அந்தப் பத்தில் ஈடு இணையற்ற அவதாரமாக மிகவும் போற்றப் பெறும் அவதாரம் ஸ்ரீ நரசிம்ம அவதாரம் ஆகும்.
இந்த அவதாரத்தின் மாபெரும் பெருமைகளை ‘சொல்லில் வடிக்க முடியாது. இருந்தாலும் இவ்வாறு எழுதுகிறோம் என்றால்,
வாஸல்யமேவ பவதோ முகரீ கரோதி”
என்று ஸ்வாமி ஸ்ரீதேசிகன் அருளியது போல அவனுடைய இன்னருள்தான் இதற்குக் காரணம்.
இந்த அவதாரத்தின் பெருமையை விளக்கும் ஸ்ரீ மத் பாகவதத்தில் ஸப்தம ஸ்கந்தத்தில் உள்ள ஸ்லோகம் ஸ்ரீநருஸிம்ஹனைப் போன்றே மிகவும் உயர்ந்து விளங்குகின்றது.
ஸத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாபதிம் ச பூதேஷ்வகிலேஷு சாத்மந:/
அத்ருச்யதாதியத்புத ரூபமுத்வஹந்
ஸதம்பே ஸ்பாயாம் ந மருகம் ந மாநுஷம் !
ஆழ்பொருளைத் தன்னுள் கொண்ட
அற்புதமான சுலோகரத்னம் இது.
உலகில் ஸாமாந்யமாக ஸ்ரீந்ருஸிம்ஹ அவதாரம் எதற்காக ஏற்பட்டது என்று கேள்வி கேட்டால் உடனே பதில் என்ன
கிடைக்கும்? எல்லோரும் என்ன சொல்வார்கள்? ஸ்ரீபிரகலாதனை ரக்ஷிப்பதற்காக என்பார்கள். ஆனால் இங்கு ஸ்ரீவியாஸ பகவான் அருளியுள்ளதை நாம் நன்கு கவனித்தல் வேண்டும்ண்டும்.
ஸ்ரீந்ருஸிம்ஹ அவதாரம் ஸ்ரீபிரகலாதனை ரக்ஷிப்பதற்காக அல்ல.
மாறாக, ஸ்ரீபிரகலாதனின் வார்த்தையை ரக்ஷிப்பதற்காகத்தான் என்பதைத் தெளிவாகத் தெரிவித்தருள்கிறார்.
ஸ்ரீபிரகலாதனை அக்னியில் தள்ளியபோதும், மலை மீதிருந்து உருட்டிக் கீழே தள்ளிய போதும் அந்த எம்பெருமான் அவனை ரக்ஷிக்கவில்லையா?
தற்போது ஸ்ரீபிரகலாதன் ‘எங்குமுளன் கண்ணன்’, எம்பெருமாள் எங்கும் நிறைத்திருக்கிறான், அவன் இல்லாத இடம் என்பதே இல்லை என்கிறாள். எம்பெருமானின் பெருமையைப் பேசுகிறான்.
தற்போது எம்பெருமான் தோன்றவில்லை என்றால் எம்பெருமானுடைய ஸர்வ வ்யாபகத்வத்திற்கு (எங்கும் பரவியிருக்கும் தன்மை) இழுக்கு ஏற்பட்டுவிடும். எனவே எம்பெருமான் ஸ்ரீபிரகலாதனின் வார்த்தையைக் காப்பதற்கே வந்து தோன்றினான் என்கிற உண்மைப் பொருளை நாம் நன்கு உணர வேண்டும்.
நிஜப்ருத்யனான (உண்மை பக்தனான) ஸ்ரீபிரகலாதனின் வார்த்தையை மெய்ப்பிப்பதற்காக மானிடம் கலந்த சிங்க ரூபத்துடன் எங்கும் நிறைந்தான்.
வந்தது ஒரு தூணிலிருந்துதான். ஆனால் மீதி எல்லா இடங்கலேயும் இன்றும் ஸ்ரீநர்ஸிம்ஹ ரூபியாக எம்பெருமான் விளங்கிக் கொண்டிருக்கின்றான் என்பதை ‘ஸ்ரீவர பஞ்சாசத்’ என ஸ்தோத்திரத்தில் ஸ்ரீதேசிகன் இவ்வாறு
கூறி அருள்கிறார்.
“இவ்வுலகில் அசையும் அசையாப் பொருள் அனைத்தும் இன்றும் கர்ப்பமாகவே உள்ளன. தனது கர்ப்பத்திற்குள் ஸ்ரீந்ருஸிம்மனைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன.
ந்ருஸிம்ஹ கர்ப்பமாவே இன்றளவும் உள்ளது.
இந்த அவதாரத்தில்தான் எத்தனையோ சித்ரவிதித்ரங்கள். ஹிரண்யகசிபுவின் வீட்டுத் தூண், பாட்டியான கதையும் இங்குதான்,
அளத்திட்ட துணை அவன் தட்டினான். அத்தூணிலிருந்து வெளிப்பட்டான் நாஹரி, அரித்தான அந்தத் தூண் தற்போது எம்பெரு ‘மானுக்கே தாயாயிற்று! ஏற்கனவே எம்பெருமானுடைய பிள்ளை நான்முகன் இருக்கிறார். எனவே நான்முகனுக்கு அந்த தூண் என்ன உறவுமுறையாக வேண்டும். அப்பாவைப் ஒரு பெற்ற அம்மா, அதாவது பாட்டி. இனி வரும் நான்முகனார்களுக்கு எல்லாம் ஒரு தூண் பாட்டியாயிற்றே என்ன ஆச்சர்யம்! குழந்தை பிறக்கும் போதே அம்மாவைப் பாட்டி ஆக்கின அவதாரம் இது!
இங்கு நிஜப்ருத்யனான நான்முகனும் எம்பெருமானுடைய பக்தனே. ஹிரண்யகசிபு நான்முகனைக் குறித்துத் தவம் செய்து பெறற்கரிய பெரும் வரங்கள் பெற்றான்.
ஹிரண்யகசிபு நான்முகனிடம் இவ்விதம் வரம் கேட்டான்: ஆகாயத்தில், பூமியில், உள்ளே, வெளியில், இரவில், பகலில், ஆயுதங்களினால் வஸ்துவினால், தேவர்களினால், இப்படி எதனாலேயும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது என்று கேட்டான். கடும் தவம் புரிந்த அவனுக்கு நான்முகன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்துவிட்டார்.
தற்போது எம்பெருமான் அவனை முடிக்கத் தீர்மானித்தான். எம்பெருமான் ஸர்வஸ்மாத்பரன், எல்லாவற்றைக் காட்டிலும் மேலானவன். அவன் ஸ்வதந்த்ரன். நான்முகன் வரம் அவனைக் கட்டுப்படுத்தாது. எப்படி வேண்டுமானாலும் அவனைக் கொன்றிருக்கலாம். ஆனால் நான்முகன் வரம் கொடுத்தால் அது செல்லாது என்று ஆகி விட்டால் நான்முகனை யாராவது வணங்குவார்களா? ஏற்கனவே நான்முகனுக்கு அதிக பூஜைகள் உலகில் நடப்பதில்லை.
இங்கு எம்பெருமான் ஸ்ரீந்ருஸிம்ஹனைப் பாருங்கள். நான்முகனுக்கு எந்த இழுக்கும் ஏற்படக்கூடாது என்று அவர் கொடுத்த வரங்களுக்குள் அகப்படாமல் அகடிதகடனா (நடக்க முடியாதவற்றை நடத்திகாட்ட வல்ல) சாமர்த்தியத்துடன் இப்படிப்பட்டம் சிறந்த அவதாரம் செய்து நான்முகன் பெருமையையும் ரக்ஷித்தான்,
நிஜப்ருத்யர் ஸ்ரீநாரதருடைய வாங் காப்பதற்காகவும் தோன்றினார்.
ஹிரண்யகசிபுவின் தர்மபத்தினி கயாதுவை பூர்ணகர்ப்பவதியான அவளை ஹிரண்யகசிபு தவம் செய்ய சென்றிருந்தபோது தேவேந்தின் வந்து இழுத்துச் சென்றான்.
வழியில் ஸ்ரீநாரதர் வந்த தன்னை மறித்து, ‘இந்திரா? நீ நினைப்பது நடக்காது. இவளது கர்ப்பத்தில் பரமபாகவதோத்தமன் இருக்கிறான். இவனை அழிக்க யாராலும் முடியாது என்று கூறி அவளைத் தனது மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிரகலாதனை யாரும் அழிக்க முடியாது என்றார் ஸ்ரீநாரதர். ஹிரண்யகசிபுவோ ஸ்ரீபிரகலாதனை அழிக்க முற்படுகிறான். அது நடக்காது என்பதைக் காட்டவும் ஸ்ரீநாரதரின் வார்த்தையைசக் காப்பதற்காகவும் இந்த உயர்ந்த அவதாரம் எங்கும் வியாபித்தான்.
இந்த அவதாரத்தின் மாபெரும் பெருமைகளைத் தான் இதிஹாஸ, புராணங்கள், ஆழ்வார்கள், ஆசார்யர்கள், எல்லோரும் அபிப்ராயத்துடன் ஒரே கூறுகிறார்கள்.
இதிஹாஸ ச்ரேஷ்டமான ஸ்ரீமத் இராமயணம் முழுவதும் ஸ்ரீந்ருஸிம்ஹ ப்ரபாவம்தான்.
ராவணன் சீதையைக் கவர்வதற்கு மாயாவியான மாரீசன் உதவியை நாடுகிறான் ஆனால் மாரீசன் அதற்குச் சம்மதிக்காமல் ராவணனுக்கு உபதேசம் செய்கிறான். –
ஹே இராவணா கூறுவதை நன்றாக கேட்பாயாக. உலகில் பிரியமான வார்தகளை எல்லோரும் பேசுவார்கள். ஆனால் ஹிதமான வார்த்தைகளைப் பேசுபவர்கள் அரிது. நான் உனக்கு ஹிதத்தைக் கூறுகிறேன் கேள்! சீதையை அபகரிக்க வேண்டும் என்கிறாயே! அந்த சீதை எங்கே அமர்ந்திருக்கிறாள் என்பதை நீ பார்க்க வேண்டும். வெறும் ராகவனுடைய மடியில் என்று நினைக்காதே.
‘தஸ்ய ஸா நரஸிம்ஹஸ்ய ஸிம்ஹோ ரஸ்கஸ்ய பாமினி” என்று நரங்கலந்த சிங்கமாய்த் தோன்றிய நரஹரியின் மடியில் அமர்ந்துள்ளாள். அவளை நெருங்க முடியாது ஜாக்கிரதை என்றான்.
அடுத்து மஹாராஜர் என்கிற ஸ்ரீசுக்ரீவன் ராமனைப் பார்த்து
தவப்ரஸாதாத் ந்ருஸிம்ஹராகவ:
ச்ரியாம் ராஜ்யஞ் ச ஸமாப்துநுயாம்யஹம்!
வெறும் ராகவனாயிருந்தால் வாலியைக் கொல்லும் ஆற்றல் உள்னிடம் இருக்காது. . நீயோ ந்ருஸிம்ஹ அவதாரம் செய்தவன். ந்ருஸிம்ஹராகவன் அந்த ந்ருஸிம்ஹபலம் உன்னிடம் உள்ளது. உன்னுடைய அனுக்கிரஹத்தினால் நான் ராஜ்யத்தை அடையப் போகிறேன்.
‘அடுத்தாக ஸ்ரீவால்மீகியும் ராமனை
மால்யவான் என்கிற குகையிலிருந்து வெளியில் வரும் போது
“ஸிம்ஹோ கிரி ” என்கிறார். ஸ்ரீந்ரும்ஹதாபநீய உபநிஷத்தில் சொல்லப் பெற்ற
ஸ்துதி ச்ருதம் கர்தஸதம் யுவாநம்
ம்ருகம் ந பீமமுபஹத்நுமுக்ரம் |
ம்ருடா ஜரித்ரே ஸிம்ஹஸ்த வாவோ
அந்யந்தே அஸ்மின் நிவபந்துஸேநா
என்கிற மந்த்ரார்த்த தேவதைதான்
ராமன் என்கிறார். இதையே ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையில் மாரிமலைமுழைஞ்சில் மன்னிக் கிடத்துறங்கும் சீரிய சிங்கம் என்று இந்த பாசுரத்தின் மூலம் இந்த அவதாரத்தின் பெருமையை பேசி இருக்கிறார்.
ராமபக்தனான ஸ்ரீஆஞ்சநேயனும் அசோக வனத்தில் கண்ணீர் வடிக்கும் சீதையைக் கண்டு, நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள். ங்காதீர்கள்! உங்கள் துயர் துடைக்க என் முதுகின் மேல் ஸ்ரீந்ருஸிம்ஹனே வரப்போகிறார். “ந்ருஸிம்ஹாவாகமிஷ்யத:” என்கிறான். எனவே ஸ்ரீஆஞ்சநேயனின் உள்ளத்தையும் கொள்ளைக் கொண்டவன் ஸ்ரீந்ருஸிம்ஹன் என்பது நன்கு புலனாகிறது. அதனால் எங்கெல்லாம் ஸ்ரீந்ருஸிம்ஹன் எழுந்தருளியிரூக்கின்றானோ, அங்கெல்லாம் ‘ஆஞ்சநேயனும் விளங்குகிறான். முக்கிய மூன்றிடம் பாருங்களேன். கடிகாசலம் ஸ்ரீசோளங்கிபுரம், நாமக்கல், மட்டநமேடு போன்ற உயர்ந்த’ க்ஷேத்திரங்களில் இவ்வழகினைக் கண்ணுறலாம்.
ராமனே தன்னை ந்ருஸிம்ஹன் எனக் கூறிக் கொண்டான்.
பிசாசாந் தாநவாந் யக்ஷராந்
ப்ருதிவ்யாம்சைவ ராக்ஷஸாத்
ப்ருதிவ்யாம்சைவ ராக்ஷஸாத்| அங்குள்யக்ரேண தாந்ஹந்யாம்.
இச்சன் ஹரிகணேச்வா
என்று ஸ்ரீசுக்ரீவனைப் பார்த்து ஸ்ரீராமன் கூறுகிறான்: ‘பிசாக, தாநவ, யக்ஷக்ஷ், ராக்ஷசர்கள் யாராயிருந்தாலும் நான் நினைத்தால் என் விரல் நுனியினாலேயே நசுக்கிப் பொசுக்கிடுவேன். என்கிறான். விரல்நுனியில் இருப்பது நகங்களன்றோ! நகங்களாலேயே முடிப்பேன். நான் ந்ருஸிம்ஹன் என்கிறான். இப்படி எங்கு தொட்டாலும் ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீந்ருஸிம்ஹ ப்ரபாவமே காணக் கிடக்கின்றது. கம்ப ராமாயணத்திலும் இது
ப்ரஸித்தமாய் விளங்குகின்றது. “ஒன்றேயுரைக்கில் ஒன்றேயாம் பலவென்றுரைக்கில் பலவேயாம் அன்றேயுரைக்கில் அன்றேயாம் ஆமென்றுரைக்கில் ஆமேயாம்”
என்கிற காப்புச் செய்யுளுடன் யுத்தகாண்டம் ஆரம்பிக்கிறது. இச்செய்யுளே ஸ்ரீந்ருஸிம்ஹனின் பெருமைகளைக் காட்டித் தருகின்றது. இதில் ‘இரணியன் வதைப்படலம்” இ என்று தனியாக ஸ்ரீந்ருஸிம்ஹ அவதாரம் பேசப்பட்டுள்ளது.
அந்தக் காலத்தில் ஸ்ரீரங்கக்ஷேத்ரத்தில் கோயிலுக்குள் தாயார் சந்நதிக்கு எதிராக உள்ள நான்கு கால் மண்டபத்தில் கம்ப ராமாயணம் அரங்கேறிற்று. அதனால்தான் அதற்கு கம்ப ராமாயண அரங்கேற்றுப்படி மண்டபம் என்று பெயர். அக்காலத்தில் எல்லோரும் கம்ப ராமாயணத்தை அரங்கேற்ற மறுத்தார்கள். மூலகாவியமான வால்மீகி ராமாயணத்தில் இல்லாத இந்த ஸ்ரீந்ருஸிம்ஹ வ்ருத்தாந்தம் இங்கு கம்பனால் புகுத்தப்பட்டிருக்கின்றது. இதை நீக்கினால் ஏற்கலாம்’ என்றார்கள். கம்பன் மிகவும் வருத்தப்பட்டு அதைக் கையிலேந்திய வண்ணம் எதிரிலுள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சந்நிதி வெளியில் நின்று
கொண்டு இப்படலத்தைப் படித்தார். “யாரடா சிரித்தாய்” என்கிற பாசுரத்தைப் படித்தபோது உள்ளே விக்ரஹரூபியாய் எழுந்து தருளியுள்ள ஸ்ரீந்ருஸிம்ஹன் தலையை அசைத்து அட்டகாச சிரிப்பு சிரித்து, ‘ஸ்ரீந்ருஸிம்ஹனின் பாடல்களை வேண்டாம் எனக் கூறியது.
யார்? அவர்கள் ஏற்காததை நானே ஏற்கிறேன்’ என்று தமது இரு திருக்கரங்களையும் நீட்டி கம்பராமாயணத்தை உலகிற்குத் தூக்கிக் காட்டினான். ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் பல இடங்களில் காட்டியதை கம்பன் ஒரே இடத்தில் காட்டினார் என்பதை உணர வேண்டும். ஸ்ரீந்ருஸிம்ஹனின் புகழ்பாடாத பாட்டு ஒரு பாட்டா? என்றான்.
இதையே திருமங்கையாழ்வாரும் பெரிய திருமொழியில் இவ்வாறு கூறுகிறார்.
கூடா இரணியனைக் கூறுகிரால் மார்விடந்த
ஓடா அடலரியை உம்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய் மார்வனை ஆர்வத்தால்
பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே !!|
ஸ்ரீருக்மிணி பிராட்டியும் “காலே ந்ருஸிம்ஹ நரலோக மநோபிராமம்” என்கிறாள். அழகியான்தானே அரியுருவம் தானே! அவனே உடனே வந்து உபகாரம் செய்யக்கூடியவன் என்கிறாள்.
ஸ்ரீஆண்டாளும் “ஹரிமுகன் அச்சுதன் கைமேலென் கைவைத்து பொரிமுகம் தட்டக் கணாக் கண்டேன் தோழீ நான்” என்று தன்னை மணந்தவன் ஸ்ரீந்ருஸிம்ஹனே என்கிறாள்.
ஸ்ரீநிவாஸ கல்யாணத்தில் ஸ்ரீநிவாஸ பத்மாவதி தம்பதி களால் நன்கு பூஜிக்கப் பட்டவன் ஸ்ரீந்ருஸிம்ஹனே என்று ப்ரஹ்மாண்ட புராணம் கூறுகிறது.
ஸ்ரீஹரி வம்சத்தில் ஸ்ரீராமபிரான் பஞ்சாம்ருத ஸ்தோத்திரத்தினால் ஸ்ரீஅஹோலம் சென்று ஸ்ரீந்ருஸிம்ஹனைப் போற்றிப் புகழ்ந்து அவனருள் பெற்று ராவணனை வென்று சீதையை மீட்டான் எனக் கூறப்பட்டுள்ளது. இப்படி ஸ்ரீராமனாலும், ஸ்ரீநிவாஸனாலும் வணங்கப்பட்டவனானதினால்தான் ஸ்ரீந்ருஸிம்ஹனுக்குப் “பெரிய பெரிய பெருமாள்” என்று பெயர்.
ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் ஸ்ரீந்ருஸிம்ஹன்தான் கை கொடுத்துத் தூக்கி உதவும் பெருந்தெய்வம் என ஸ்ரீந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தில் அருளுகிறார். இப்படி எழுதிக்கொண்டே போகலாம். இற்குமுடிவேது?
ந்ருஸிம்ஹ ஜெயந்தி: கருணையும் அழகும் கலந்த கடவுள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.