எப்படிப்பட்ட சத்குருவை அடைய வேண்டும்? ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

bharthi theerthar
bharthi theerthar
bharthi theerthar

சத்குரு என்பவர் யார் பகவத்பாத சங்கரர் கூறுகிறார்.‌ சாஸ்திர விஷயங்களில் ஆழ்ந்த அறிவுள்ளவராகவும் பிரம்ம ஞானியாகவும் சீடனின் நன்மைக்காக பாடுபடுபவர் ஆகவும் இருப்பவரே சத்குரு.

சாஸ்திரத்தில் பண்டிதராக இருந்தும் பிரம்மஞானம் அடையாத ஒருவர் எவ்வளவுதான் சீடனின் நன்மைக்காக பாடுபடுவதாக இருந்தாலும் அவர் குரு எனும் ஸ்தானத்தை அடைய இயலாது.

இப்பேர்பட்ட அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கும் சீடன் ஒரு சந்தேகம் கேட்பதாக வைத்துக்கொள்வோம் அந்த சமயங்களில் இம்மாதிரியான குரு மூன்று விதமான பதில்களை தரக்கூடும் ஒன்று சீடனைப் இப்படி சந்தேகங்களை கேட்காமல் மேற்கொண்டு படி. நான் சொல்வதைக் கேள் என அதட்டி அவனை அடக்கி விடலாம் அல்லது இரண்டாவதாக நேரம் ஆகிக் கொண்டே போகிறது சந்தேகங்களை எழுப்பி கொண்டிருப்பதால் மேற்கொண்டு பாடம் நடத்த அவகாசம் இல்லை எனக்கூறி அந்த விஷயத்தை மூடி விடலாம். மூன்றாவதாக தொடர்ந்து படித்து உன் சந்தேகங்களை நிவர்த்தி ஆகி விடும் எனக் கூறி நிலைமையை சமாளித்து விடலாம்.

இப்படிப்பட்ட வகைகளில் கூறுபவர்கள் உருவாகிவிட முடியாது சீடனின் சந்தேகங்களை முறையான வழியில் அறவே நிவர்த்தி செய்பவர் குரு ஆகிறார் அப்படிப்பட்ட சத்குருவை நாமல்லாம் நாடி நம் வாழ்க்கையின் குறிக்கோளை சாதித்துக் கொள்ள வேண்டும்

எப்படிப்பட்ட சத்குருவை அடைய வேண்டும்? ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply