மதுரை பகுதியில் பங்குனி உத்ஸவ விழாக்கள்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

அலங்காநல்லூர் அருகே மறவர் பட்டியில் வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழா!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், மறவர் பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மஞ்சமலை சுவாமி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆகிய தெய்வங்களுக்கு வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழா கடந்த மாதம் செவ்வாய்க்கிழமை சாமி சாட்டுதல் நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து, தொடர்ந்து வெள்ளிக்கிழமை பூசாரிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு காப்பு கட்டுதல் தொடர்ந்து கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

சனிக்கிழமை அன்று பிடிமம் கொடுத்தல் ஞாயிற்றுக்கிழமை கும்மி பாட்டு கலை நிகழ்ச்சி திங்கட்கிழமை அன்று ஊத்துக்காடு சென்று தீர்த்தம் எடுத்து வந்து அருள்மிகு கன்னிமார் கருப்புசாமி கோவில் பொங்கல் வைத்து அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

செவ்வாய்க்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீ விநாயகர் காளியம்மன் கோவில் முத்தாலம்மன் கோவில் மஞ்ச மலையாண்டி கோவில் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.

புதன்கிழமை அன்று முத்தாலம்மன் கண் திறக்கின்ற இடத்தில் உள்ள மேடையில் எழுந்தருளி கண் திறந்து ஆடை ஆபரணங்கள் அலங்காரம் செய்து வாண வேடிக்கை ஆலயம் வந்து சேர்ந்தன.

வியாழக்கிழமை ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பால்குடம் அக்னி செட்டிநாடு கிடாய் வெட்டுதல் பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று அன்னதானம் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டுதல் வளையம் பிரித்தல் பிரசாதம் வழங்குதல் ஆகியவை உடன் திருவிழா நிறைவேறியது விழா விற்கான ஏற்பாடுகளை மறவபட்டி கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

பங்குனி பெருந் திருவிழா!

இராஜபாளையம் அருகே கொம்மந்தாபுரம் இந்து நாடார் உறவினருக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் கொம்ந்தாபுரம் பகுதியில் உள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் பூக்குழி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

இந்தக் கோவிலில், கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இது வழக்கத்தில் உள்ளது 50 ஆண்டுகளுக்கு பின்பு புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு தற்போது பங்குனி திரு விழாவிற்கு கெடியேற்றப்பட்டுள்ளது

இந்த பூக்குழி திருவிழாவை காண்பதற்கு இராஜபாளையம் சேத்தூர் முகவூர் ப உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வர்கள்.
இந்த பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை ராஜபாண்டி
தலைவர் செல்லத்துரை உபதலைவர் ராஜ்குமார் மற்றும் ஒரு பொதுமக்கள்
சார்பில் செய்யப்பட்டுள்ளன.

சோழவந்தான் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது பூமேட்டு கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைகையாற்றுக்கு சென்று பூஜைகள் செய்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது பின்னர் பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் பொதுமக்கள் முளைப்பாரி எடுக்கும் தாய்மார்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

முளைப்பாரி பதியமிடல் நடைபெற்றது. சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் செய்யப்பட்டது. அடுத்த வாரம் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை எம் வி எம் குழும சேர்மன் மணி முத்தையா, லயன் டாக்டர் மருதுபாண்டியன், கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளிமயில் மற்றும் பூமேட்டு தெரு கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பங்குனி: கனி மாற்று விழா!

மதுரை மாவட்டம், பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு செல்லத்தம்மன் காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பங்குனி மாதத்தை ஒட்டி மழை வேண்டியும் உலக நன்மை வேண்டியும் கனி மாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

500- க்கும் மேற்பட்ட பெண்கள் பழ தட்டுடன் ஊர்வலமாக வந்துசாமி தரிசனம் செய்து கனி மாற்றி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை
பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபை சார்பாக செய்திருந்தனர்.



Leave a Reply