e0af8d-e0aeaee0af81e0aeb0e0af81.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 19
திருப்பரங்குன்றம் தலத்து ‘அருக்கு மங்கையர்’ பாடல்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
முருகன் இலக்கணம் சொன்ன கதை
றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை|
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை …… புனைவோனே
அழகிய குமரவேளே என்று, இலக்கணங்களும் இயற்றமிழும் இசைத்தமிழும் மிகவும் விரித்துரைக்கும் அழகிய பலவகையான மதுரம் பொருந்திய கவிகளைச் செய்யும் செந்தமிழ்ப் பிரபந்தங்களை விதம் விதமாகப் புனைந்து கொண்டிருக்கின்ற திருத்தோள்களை உடையவரே!
புலவர்களால் ‘முத்தமிழ்கொடு இலக்கண’ முறைப்படி மிக மதுரமாக வகைவகையான பாவினங்களால் தொடுத்த செந்தமிழ்ப் பாமாலைகளை முருகவேள் தமது பன்னிரு புயங்களிலும் தரித்திருக்கிறார். செவ்வேட்பரமன் செந்தமிழ்ப் பரமாசாரியனான படியால் செந்தமிழில் மிகவும் அன்புடையவன் என்பது இதனாற் புலனாகும்.
“செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார” —(முந்துதமிழ்) திருப்புகழ்.
“செந்தில் வாழ் செந்தமிழ்ப் பெருமாளே” —(பங்கமேவு) திருப்புகழ்.
தேவயானை அம்மையாரோடுகூடிய இன்பத்தினும் நக்கீரர் துதித்த திருமுருகாற்றுப்படை என்னும் செந்தமிழ் நூல் தித்தித்தது என்றால் முருகப் பெருமானுக்குச் செந்தமிழ் எத்துணை மகிழ்ச்சியைத் தருகிறது என்பதைத் தமிழ்மொழி பேசும் பாக்கியம் பெற்றோர் அனைவரும் சிந்திக்க.
“கைமாமயில் செவ்வி நற்கீரர் சொற் றித்தித்ததே” — கந்தரந்தாதி
“ஆயிரமுகத்து நதி பாலனும் அகத்தடியர்
ஆனவர் தொடுத்த கவிமாலைக் காரனும்” — திருவேளைக்காரன் வகுப்பு.
மேலும், அருணகிரியாரது பாடலை மிகமிக அன்போடு சூடிக்கொள்ளுகிறார் என்பதனை,
“மல்லே புரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே”
என்ற அநுபூதி வாக்காலும் உணர்க. இதுவேயும் அன்றித் தமிழ் தெய்வமொழி என்பதற்குச் சான்று:
சிவபெருமான் ஆரூரருக்குத் திருவெண்ணெய் நல்லூரில் `பித்தா பிறை‘ என்றும்,சேக்கிழாருக்கு தில்லையில் `உலகெலாம்’ என்றும், முருகவேள் நக்கீரருக்கு “உலகம் உவப்ப” என்றும், அருணகிரியாருக்கு “முத்தைத்தரு” என்றும்,இன்னோரன்ன பிறவும் தமிழால் அடியெடுத்துத் தந்தனேரே அன்றி, வேறு ஒருவருக்கு, வேற்று மொழியில் அடியெடுத்துக் கொடுக்கவில்லை என்பது ஒன்றே அமையும்.
எலும்பைப் பெண்ணாக்கியதும், முதலை வாய்ப்பட்ட மகனை உயிர்ப்பித்ததும், அனல் வாதம் புனல் வாதம் புரிந்து வென்றதும், தூணிடையிருந்து குமாரக் கடவுளை வெளிப்படுத்தியதும் இத் தமிழ்மொழி அல்லவா.
திருப்புகழ் கதைகள்: முருகன் இலக்கணம் சொன்ன கதை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.