மனதில் ஒன்று வெளியே ஒன்று வாழ்பவருக்கு… ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

bharathi theerthar
bharathi theerthar

மனிதன் எப்பொழுதும் திரிகரண சுத்தியோடு இருக்க வேண்டும் அதாவது எண்ணங்கள் வார்த்தைகள் காரியங்கள் இந்த மூன்றும் இணைந்து சுத்தமாக இருக்கவேண்டும்.

அவர்களை சத்புருஷர்கள் என்று சொல்லலாம் அப்படி இல்லாமல் மனதில் ஒன்று பேச்சில் ஒன்று செயல் ஒன்று என்று செய்தால் அவன் துராத்மா என்று சொல்லப்படுவான் சிலர் மனதில் கெட்ட எண்ணங்களை வைத்துக்கொண்டு வெளியில் நல்லவராகவும் இன்னொருவருக்கு சேவை செய்பவராகவும் தோன்றுவார்.

அவர்கள் உள்ளத்தில் அடங்கிய எண்ணம் கடைசியில் தான் தெரியும் அப்பொழுது மனதுக்கு மிகவும் கஷ்டமாகும் அப்பேர்ப்பட்ட ப்ரவத்தி அதாவது ஆட்டிட்யூட் மிகவும் தவறானது தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக பிறரை நம்ப வைத்து ஏமாற்றுவது மிகவும் பாவம்.

அப்பேர்ப்பட்ட பாவத்தை யாரும் செய்யக்கூடாது அதே மாதிரி சில இடங்களில் பாவ சன்னதியில் பக்தர்கள் வந்து பகவானை பிரார்த்திக்கும் சமயம் சிலர் பக்தர்கள் மாதிரி வேஷம் போட்டு சாமான்களை திருடி விடுவார்கள் அப்படி பக்தர்கள் மாதிரி நடித்து திருட்டுத்தனம் செய்த நபர்கள் மிகவும் குரூரமான தண்டனையை அனுபவிப்பார்கள்்.

அப்படிப்பட்ட ப்ரவத்தி மனிதனுக்கு எந்த காலத்திலும் இருக்கக்கூடாது நாம் ஒருவரை ஏமாற்றினால் நம்மையும் இன்னொருவர் ஏமாற்றுவார் என்ற விஷயத்தை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அதை தெரிந்து கொண்டு யாரையும் ஏமாற்றாமல் எல்லோருடனும் முறையான ரீதியில் பழக வேண்டும் அப்படி திரிகரணசுத்தி ஆக இருக்கும் ஒருவனுக்கு பகவான் பரிபூரணமாக அனுக்கிரகம் செய்வார்

மனதில் ஒன்று வெளியே ஒன்று வாழ்பவருக்கு… ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply