பஞ்சாங்கம் பார்க்கலாமா?!

ஆன்மிக கட்டுரைகள்

style="text-align: center; ">பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?

இப்படி பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்ல நாமும்  கொஞ்சம் கற்றுக் கொள்வோமே!

சில அடிப்படைத் தகவல்கள்:

ஆண்டுகளைக் கணக்கிட நமது முன்னோர் சுழற்சி முறையில் அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டுத் தந்துள்ளனர்.

வான் மண்டலத் தொகுதி அல்ல ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் கொண்டு விளங்குகிறது. நாம் முக்கியமானவை என்று கொண்டுள்ள 27 நக்ஷத்திரங்களும் இப்பாதையில் அமைந்துள்ளன. இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும் சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியுள் ளன. எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது. சூரியன் வான் பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது.

ஒருமுறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது.

குரு சுமார் ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும். சனி மாதத்துக்கு ஒரு பாகை நகரும். எனவே குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 12 வருடங்கள் ஆகின்றன. சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 30 வருடங்கள் ஆகின்றன.

சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம்-இதுவே முதல் வருடம். இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் பெயரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.

ஆண்டுகள் 60

1.பிரபவ

2.விபவ

3.சுக்கில

4.ப்ரமோதூத

5 ப்ரஜோத்பத்தி

6.ஆங்கிரஸ

7. ஸ்ரீமுக

8.பவ

9.யுவ

10.தாது

11.ஈசுவர

12.வெகுதான்ய

13.ப்ரமாதி

14.விக்கிரம

15.விஷு

16.சித்ரபானு

17.சுபானு

18.தாரண

19.பார்த்திப

20.விய

21.ஸர்வஜித்

22.ஸர்வதாரி

23.விரோதி

24.விக்ருதி

25.கர

26.நந்தன

27.விஜய

28.ஜய

29.மன்மத

30.துர்முகி

31.ஹேவிளம்பி

32.விளம்பி

33.விகாரி

34.சார்வரி

35.ப்லவ

36.சுபகிருது

37.சோபகிருது

38.குரோதி

39.விசுவாவசு

40.பராபவ

41.ப்லவங்க

42.கீலக

43.சௌமிய

44.சாதாரண

45.விரோதிகிருது

46.பரிதாபி

47.ப்ரமாதீ

48.ஆனந்த

49.ராக்ஷஸ

50.நள

51.பிங்கள

52.களயுக்தி

53.சித்தார்த்தி

54.ரௌத்ரி

55.துன்மதி

56.துந்துபி

57.ருத்ரோத்காரி

58.ரக்தாக்ஷி

59.குரோதன

60.அக்ஷய

தமிழ்மாதங்கள்

சௌரமான ஆண்டுக் கணக்கீட்டில் மாதம் என்பது ஸூர்யன் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் 30 நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஸூர்யன் எந்த ராசியில் என்று பிரவேசிக்கிறானோ அதுவே மாதத்தின் தொடக்க நாளாகவும் அந்த ராசியின் பெயரே மாதத்தின் பெயராகவும் உள்ளது.

ஸங்கல்பத்தில் நாம் மாதத்தின் பெயரைக் கூறும்போது இந்தப் பெயர்களையே பயன்படுத்துகிறோம். ஆனால் நடைமுறையில் தமிழ் மாதங்களின் பெயர்கள்-அந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தன்று பௌர்ணமி திதி வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயரையே கொண்டதாக அமைந்துள்ளது.

மாதங்களின் பெயர்கள்

நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

சித்திரைமேஷ மாசம்

வைகாசிரிஷப மாசம்

ஆனி –  மிதுன மாசம்

ஆடிகடக மாசம்

ஆவணி –  சிம்ம மாசம்

புரட்டாசிகன்னி மாசம்

ஐப்பசிதுலா மாசம்

கார்த்திகைவிருச்சிக மாசம்

மார்கழிதனுர் மாசம்

தைமகர மாசம்

மாசிகும்ப மாசம்

பங்குனிமீன மாசம்

* எந்த மாசத்தில் பூர்ணிமை, அமாவாஸ்யை இல்லையோ அந்த மாஸத்துக்கு விஷமாசம் என்று பெயர்.

* எந்த மாசத்தில் இரண்டு பூர்ணிமையோ, இரண்டு அமாவாஸ்யையோ வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.

* விஷ மாசத்திலும், மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.

* ஆனால் சித்திரை, வைகாசி, மாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.

அயனங்கள்

ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸூர்யன் மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது.

தைமாதம் தொடங்கி ஆனி ஈறாக 6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், க்ரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம்.

ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.

ருதுக்கள் – 6

ஒரு வருடம் 6 ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சித்திரை, வைகாசி – வஸந்த ருது

ஆனி, ஆடி, – க்ரீஷ்ம ருது

ஆவணி, புரட்டாசி – வர்ஷ ருது

ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது

மார்கழி, தை – ஹேமந்த ருது

மாசி, பங்குனி – சிசிர ருது

கிழமைகள் – 7

ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. ஸூர்ய உதயத்திலிருந்து மறுநாள் ஸூர்யோதயம் வரை ஒரு நாளாகும்.

சாயா க்ரஹங்கள் இரண்டு நீங்கலாக மீதமுள்ள ஏழு க்ரஹங்களுக்குரியதாக ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம் என்று தமிழில் அறியப்படுகிறது.

ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

ஞாயிறுபானு வாஸரம்

திங்கள்இந்து வாஸரம்

செவ்வாய் –  பௌம வாஸரம்

புதன் –  ஸௌம்ய வாஸரம்

வியாழன் – குரு வாஸரம்

வெள்ளிப்ருகு வாஸரம்

சனிஸ்திர வாஸரம்

திதிகள் – 15

ஸூர்யன் இருக்குமிடம் முதல் 12 பாகைகள் சந்திரன் நடப்பினில் ஒரு திதியாகும்.

1. ப்ரதமை

2. த்விதியை

3. த்ருதியை

4. சதுர்த்தி

5. பஞ்சமி,

6. ஷஷ்டி

7. ஸப்தமி

8. அஷ்டமி

9. நவமி

10. தசமி

11. ஏகாதசி

12. துவாதசி

13. த்ரயோதசி

14. சதுர்த்தி

15. பூர்ணிமா (அல்லது) அமாவாஸ்யை

மாதம் என்பது இருபக்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அமாவாஸ்யை அடுத்த பிரதமை முதல் பௌர்ணமி வரை சுக்லபக்ஷம் என்றும் பௌர்ணமியை அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை கிருஷ்ணபக்ஷம் என்றும் வழங்கப்படுகிறது.

தமிழில் இதனை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் கூறுகிறோம்.

திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம். கரணம் என்பவையே பஞ்சாகத்திள்ள ஐந்து அங்கங்களாகும்.

இவற்றில் திதி, வாரம், (வாஸரம்) ஆகிய இரண்டினைப் பற்றியும் மேலே கண்டோ ம். இனி மற்ற மூன்றினையும் அறிவோம்.

நக்ஷத்திரங்கள் – 27

வான் வட்டப்பதையில் உள்ள நக்ஷத்திரங்கள் இருபத்தேழும் பன்னிரண்டு ராசிகளுக்குப் பங்கிடப்பட்டிருக்கின்றன.

நக்ஷத்திரங்கள் 27 – ம் வருமாறு:

நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

அஸ்வதிஅஸ்வினி

பரணிஅபபரணீ

கார்த்திகை – க்ருத்திகா

ரோகிணிரோகிணீ

மிருகசீர்ஷம் – ம்ருகசிரோ

திருவாதிரைஆர்த்ரா

புனர்பூசம்புனர்வஸூ

பூசம்புஷ்யம்

ஆயில்யம் –  ஆஸ்லேஷா

மகம்  –  மகா

பூரம்பூர்வபல்குனி

உத்திரம்உத்ரபல்குனி

ஹஸ்தம்ஹஸ்த

சித்திரைசித்ரா

சுவாதிஸ்வாதீ

விசாகம்விசாகா

அனுஷம்அனுராதா

கேட்டைஜ்யேஷ்டா

மூலம் மூலா

பூராடம்பூர்வ ஆஷாடா

உத்திராடம் – உத்ர ஆஷாடா

திருவோணம்ச்ரவண

அவிட்டம்ஸ்ரவிஷ்டா

சதயம்சதபிஷக்

பூரட்டாதிபூர்வப்ரோஷ்டபதா

உத்திரட்டாதிஉத்ரப்ரோஷ்டபதா

ரேவதிரேவதி

ராசிகள் – 12

1. மேஷம் 2. ரிஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி

7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்

மேலே சொன்ன நக்ஷத்திரங்கள் இருபத்தி ஏழும் ஒவ்வொரு ராசிக்கும் 2 1/4 நக்ஷத்திரம் விதம் பங்கிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. ஆகவே, ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் அல்லது 2 1/4 நக்ஷத்திரங்கள் உண்டு.

யோகங்கள் – 27

1. விஷ்கம்பம் 2. ப்ரீதி 3. ஆயுமான்

4. சௌபாக்யம் 5. சோபனம் 6. அதிகண்டம்

7. சுகர்மம் 8. த்ருதி 9. சூலம்

10. கண்டம் 11. வ்ருத்தி 12. துருவம்

13. வியாகாதம் 14. ஹர்ஷணம் 15. வஜ்ரம்

16. ஸித்தி 17. வ்யதீபாதம் 18. வரியான்

19. பரீகம் 20. சிவம் 21. ஸித்தம்

22. ஸாத்தியம் 23. சுபம் 24. சுப்ரம்

25. பராம்யம் 26. மாஹேந்த்ரம் 27. வைத்ருதி

கரணங்கள் – 11

1. பவம் – சிங்கம்

2. பாலவம் – புலி

3. கௌலவம் – பன்றி

4. தைதிலம் – கழுகு

5. கரம் – யானை

6. வணிஜை – எருது

7. பத்ரம் – கோழி

8. சகுனி – காக்கை

9. சதுஷ்பாதம் – நாய்

0. நாகவம் – பாம்பு

11. கிமுஸ்துக்னம் – புழு

இராகு காலம்

ஒவ்வொரு கிழமையிலும் இராகு காலம் எப்போது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வரிப்பாட்டு ஒன்று சொல்லுவார்கள். அதனை மனதில் கொண்டு கணக்கிட்டுச் சொல்லலாம்.

திருவிழா சந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?

கிழமை = இராகு காலம்

ஞாயிறு = 04.30 – 06.00

திங்கள் = 7.30 – 9.00

செவ்வாய் =  03.00 – 04.30

புதன் = 12.00 – 01.30

வியாழன் =  01.30 – 03.00

வெள்ளி = 10.30 – 12.00

சனி = 09.00 – 10.30

எமகண்டம்

இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.

விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே

கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்

ஞாயிறு : 12.00 – 01.30

திங்கள் : 10.30 – 12.00

செவ்வாய் : 09.00 – 10.30

புதன் : 07.30 – 09.00

வியாழன் : 06.00 – 07.30

வெள்ளி : 03.00 – 04.30

சனி : 01.30 – 03.00

 

கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்

ஞாயிறு : 06.00 – 07.30

திங்கள் : 03.00 – 04.30

செவ்வாய் : 1.30 – 03.00

புதன் : 12.00 – 01.30

வியாழன் : 10.30 – 12.00

வெள்ளி : 09.00 – 10.30

சனி : 07.30 – 09.00

இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.

 

குளிகை

கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்

ஞாயிறு = 03.00 – 04.30

திங்கள் = 01.30 – 03.00

செவ்வாய் = 12.00 – 01.30

புதன் = 10.30 – 12.00

வியாழன் =  09.00 – 10.30

வெள்ளி = 07.30 – 09.00

சனி = 06.00 – 07.30

 

 

கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்

ஞாயிறு = 09.00 – 10.30

திங்கள் = 07.30 – 09.00

செவ்வாய் = 06.00 – 07.30

புதன் = 03.00 – 04.30

வியாழன் =  01.30 – 03.00

வெள்ளி = 12.00 – 01.30

சனி = 10.30 – 12.00

 

Leave a Reply