ஹஸ்தாமலகர்: சிருங்கேரி மகிமை!

ஆன்மிக கட்டுரைகள்

00" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeb9e0aeb8e0af8de0aea4e0aebee0aeaee0aeb2e0ae95e0aeb0e0af8d-e0ae9ae0aebfe0aeb0e0af81e0ae99e0af8de0ae95e0af87e0aeb0e0aebf-e0aeae-1.jpg" class="attachment-medium size-medium wp-post-image" alt="hasthamalakar" style="margin-bottom: 15px;" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeb9e0aeb8e0af8de0aea4e0aebee0aeaee0aeb2e0ae95e0aeb0e0af8d-e0ae9ae0aebfe0aeb0e0af81e0ae99e0af8de0ae95e0af87e0aeb0e0aebf-e0aeae.jpg 494w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeb9e0aeb8e0af8de0aea4e0aebee0aeaee0aeb2e0ae95e0aeb0e0af8d-e0ae9ae0aebfe0aeb0e0af81e0ae99e0af8de0ae95e0af87e0aeb0e0aebf-e0aeae-2.jpg 269w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeb9e0aeb8e0af8de0aea4e0aebee0aeaee0aeb2e0ae95e0aeb0e0af8d-e0ae9ae0aebfe0aeb0e0af81e0ae99e0af8de0ae95e0af87e0aeb0e0aebf-e0aeae-3.jpg 150w" sizes="(max-width: 269px) 100vw, 269px" title="ஹஸ்தாமலகர்: சிருங்கேரி மகிமை! 19">
hasthamalakar
hasthamalakar

ஸ்ரீபலிக்கிராமம் என்று ஓர் ஊருண்டு. அவ்வூரில் பிரபாகரர் என்ற ஒரு பிராம்மணோத்தமர் வஸித்து வந்தார். அவருக்கு ஒரு குழந்தையுண்டு. குழந்தையுடன் தாயும் தகப்பனாரும் மற்ற உறவினரும் ஒரு நாள் ஒரு விசேஷ் புண்ணிய காலத்தில் நதி தீரத்திற்கு ஸ்நானம் செய்யச் சென்றார்கள்.கரையில் விடப்பட்டிருந்த குழந்தை சிறிது சிறிதாகத் தவழ்ந்து (ஆற்று) வெள்ளத்தில் விழுந்து ஆழ்ந்து போயிற்று. இதையறிந்த பெற்றோர்களும் மற்றோர்களும் பரிதாபகரமாய்க் கதறி அழுதார்கள்

அந்த நதி தீரத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த ஒரு பெரியவர் இவர்களின் விசனத்தைக் கண்டு மனங்கரைந்தவராய் சரீரத்தை அங்கு உதறித்தள்ளிவிட்டு தண்ணீரில் தவறி விழுந்த அக்குழந்தையின் சரீரத்தில் அநுப்ரவேசம் செய்தார். (உட்ப்புகுந்தார்) குழந்தை உயிர் பெற்றதையறிந்த மாதாபிதாக்கள் ஸந்தோஷத்துடன் வீடு சேர்ந்தார்கள். ஆனால்? இக்கு பேசத்தக்கப் பருவம் வந்தும் பேசவில்லை. உலகக்காரியம் வீட்டுக்காரியம் ஒன்றிலும் புத்திநாட்டமில்லாமலிருந்த குழந்தையின் மந்தத்தன்மையைப் பார்த்த மாதாபிதாக்கள் வருந்தி, அது ஒரு மந்தி என்றே நினைத்து வந்தார்கள். பூநூல் போடவேண்டிய சமயம் நெருங்கியது. ஊமைக்குச் செய்வது போல், ஊமைப்பூநூலும் போட்டார்கள். அதன்பின் தெய்வாதீனமாக அங்கு ஸ்ரீஆச்சாரியர்கள் விஜயம் செய்தார்கள். மஹானிடம் கொண்டு போனால் இந்த மந்திக்கும் அநுக்ர விசேஷத்தால் மதிப்ரஸாதம் (புத்தித்தெளிவு) தோன்றுமென்று நினைத்து, குழந்தையை ஆசாரியர் சந்நிதியில் அழைத்து வந்து நிறுத்தினார்கள்! ஸ்ரீ ஆசார்யேந்த்ரர்கள் இந்த சிசுவைப்பார்த்து ”கஸ்த்வம் சிசோ! – குழந்தாய்! நீ யார்?” என்று கேட்டார்கள். “நான் சரீரமல்ல; கண் முதலிய இந்திரியமல்ல; மனதுமல்ல அவ்வெல்லாவற்றிற்கும் சாக்ஷியான சிவ (ஆத்ம) ஸ்வரூபனாகின்றேன். என்று உபநிஷத்துக்களின் சாரம் அடங்கிய பல ஸ்லோகங்களால் குழந்தை சமாதானம் தெரிவித்தது. அன்று வரை மந்தியாயிருந்த குழந்தை ( தனக்குள்) மகான்கள் கொண்டாடத் தகுந்த ஆத்மஞானஸம்பத்து நிறைந்து அந்த த்ருடஞான விசேஷத்தினால் மௌனநிஷ்டையிலிருந்த மகிமையறிந்து ஆச்சர்யத்துடன் கொண்டாடினார்கள். இந்த ஞானபூர்ணமான பதிலைக் கேட்ட பெற்றோர்கள் இனி இந்தக் குழந்தை ஸ்வாமிகளிடமே இருக்கத்தகுந்ததென்று தெரிவித்து, குழந்தையை சுவாமிகளிடம் அர்ப்பணஞ் செய்தார்கள். அது ஹஸ்தாமலகரின் சாஸ்திரீய ஞானத்தைக் குறித்த சந்தோஷமல்ல. அனுபவஞானத்தைக் குறித்துண்டான சந்தோஷம். பூர்வ ஆச்ரமத்தில் மண்டனமிசிரராயிருந்தவரும் பிற்காலம் சுரேசுவரர் என்னும் பெயரோடு ஸந்யாஸாச்ரமம் ஸ்வீகரித்து விளங்குவோருமாகிய ஸுரேச்வராசாரியார் கர்மவாஸனை (கர்மப்பற்று) அதிகமாகவுடையவராதலாலும், ஹஸ்தாமலகர் க்ருடமான பிரஹ்மநிஷ்டை உள்ளவராகக் காணப்படுவதாலும் இவரையே ஸ்ரீ ஆசாரியர்களின் உபநிஷத் பாஷ்யத்திற்கு “விருத்தி” செய்யுமாறு செய்தல் நலம் என்ற அபிப்பிராயத்தை ஆசாரியர்களிடம் பத்மபாதர் தெரிவித்தார். ஒரு ப்ரபந்தம் (சாஸ்திரக்கிரந்தம்) செய்யவேண்டுமென்றால், மனம் விரிவாகச் செல்லவேண்டும். ஹஸ்தாமலகரோ மனத்தை அடக்கினவர். அவரால் எவ்விதம் மனதை விரித்துக் கொண்டு வியாக்கியானம் எழுதமுடியுமெனச் சிலர் நினைக்கலாம். முன் ஆசாரியர்களிடம் ஹஸ்தாமலகர் தெரிவித்த அபிப்பிராயத்திலிருந்து ஹஸ்தாமலகரின் ஞானவைபவம் வெளியாகும். அவர் ஆற்றில் விழுந்த ஒரு சிசுவின் சரீரத்தில் பிரவேசிக்குமுன் செய்த ‘ச்ரவண, மனன, நிதித்தியாஸநாதி ஞானஸுயாதனங்களையெல்லாம் அனுஷ்டித்துப் பழகியவர் என்பதை ஆசாரியர்கள் மேற்சொன்ன கதையினால் விளக்கினார்கள். ஆகவே, ஹஸ்தாமலகர் முன் சரீரத்திலிருந்த காலங்களில் ஸாதனம் செய்து, அதனால் ஸாத்யமான ஞானம் பெற்றவரென்றும், அந்த அநுபூதியினின்றும் இப்பொழுது நழுவாது விளங்குகிறாரென்றும் தெரியவந்தது. இதனால் யோகசாஸ்திரம் பொய்யல்லவென்றும் யுக்தியனுபவங்களுக்குப் பொருந்திய தென்றும் பிரகாசமாயிற்று. உலகத்தில் எல்லா ஜனங்களும் தனக்கு (தங்களுக்கு) சுகம் வேண்டுமென்றே முயற்சிக்கிறார்கள். சுகம் அனுபவிக்க விரும்பி, வெகு தூரத்திலிருந்து சரீரப்பிரயாசப் பட்டுத் தண்ணீர் கொண்டு வருகிறார்கள். சரீரம் கஷ்டப்படுகிறது. சரீரமே ஆத்மாவானால் இவ்வித வெயிலில் போய்க் கஷ்டப்பட்டுத் தண்ணீர் தூக்கச் சம்மதிக்குமா? சரீரத்திலும் வேறாக ஆத்மா ஒன்று இருப்பதால் அதன் சுகத்தை விரும்பி சரீரம் கஷ்டப்பட சம்மதிக்கிறது.

hasthamalakar1
hasthamalakar1

ஹரிச்சந்திரன் என்ன பாடுபட்டான்? அவன் சக்கரவர்த்தி. சம்பத்தை இழந்தான்; புத்திரனைப் பறிகொடுத்தான்! மனைவியை விற்றான். தானும் சண்டாளனுக்கு அடிமையாகி வருந்தினான் சரீரமே ஆத்மாவானால் இவ்வித பதவியையும், மனைவி மக்களையும் இழப்பானா? ஆனால் சரீரத்தினும் அந்யமாக ஆத்மா ஒன்று இருக்கிறது, அதன் க்ஷேமத்திற்காக நமது சரீரம் முதலியது எவ்வித கஷ்டப்படினும் சரி, ஆத்மாவுக்கே க்ஷேமம் உண்டாகவேண்டும் என்றும் அவன் கருதி, ஸகலத்தையும் தியாகஞ்செய்தான். தனக்கு சுகம் வேண்டும் என்பதே மனிதனுடைய விருப்பமும் உத்தேசமுமாகும். ‘தனக்கு சுகம்’ என்றால், சவீரத்திற்கல்ல என்பது முன் தெரிவித்த உதாரணங்களால் தெரியும்.

ஹஸ்தாமலகர்: சிருங்கேரி மகிமை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply