அனுமனுக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்?

ஆன்மிக கட்டுரைகள் ஸ்தோத்திரங்கள்

53" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2010/10/hanuman.jpg" alt="" width="789" height="713" />

அனுமனுக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்? இன்று  சனிக்கிழமை அறிந்துகொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவோம்

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அனுமனை ஆராதித்து வழிபட்டு இந்த மந்திரங்களை கூறி வந்தால் அச்சம் விலகி எடுத்த காரியம் வெற்றிபெறும்.

.

அச்சம் விலக:-

தினமும் 21 முறை ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் என்ற மந்திரத்தையும் கூறலாம்.

அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்:-

ஆஞ்சநேயர் அருள் தரும் மந்திரங்கள்

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்லோகம் மற்றும் மந்த்ரம்

1) ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |

அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||

2) அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |

கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

3) ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |

பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

4) யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்

தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |

பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்

மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

5) மனோஜவம் மாருத துல்ய வேகம்

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |

வாதாத்மஜம் வானரயூத முக்யம்

ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||

*

ப்ரார்த்தனா மந்த்ரம்

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

*

கார்ய சித்தி மந்த்ரம்

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |

ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||

*

நமஸ்கார மந்த்ரம்

ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |

அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||

ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார்.

அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார்.

முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்தப்பின்,

அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது,

அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார்.

அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது என ஹனுமான் கேட்க, அதற்கு சீதாபிராட்டி, ‘மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும் தான்,

எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே, செந்தூரத்தை இட்டுக் கொண்டேன்.

ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை,எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும்.அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே, அதை இட்டுக் கொண்டேன் என்றாராம் சீதாபிராட்டி.

அதைக் கேட்ட ஹனுமார் புல்லரித்துப் போய், ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும் என்ற மனதோடு,ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம். அதனால் தான் ஹனுமாருக்கு செந்தூரம் இடுகிறோம்.

Leave a Reply