நீலகண்டமஹம் பஜே ! பசவராஜீயம் – நோய் தீர்க்கும் ஸ்லோகங்கள்!

ஸ்தோத்திரங்கள்
neelakanta

நீலகண்டமஹம் பஜே ! பசவராஜீயம் –
நோய் தீர்க்கும் ஸ்லோகங்கள்:-

விஷத்தை விழுங்கிய மிருத்யுஞ்ஜயன், தான் சாஸ்வதமான அமிர்த சொரூப பரபிரம்மம் என்று நிரூபித்த லீலை நீலகண்ட லீலை. விஷம் கூட அவருடைய தொண்டையில் அலங்காரமாக அமைந்தது. அனைவரையும் பயப்படத் செய்த விஷம்,

சிவனின் தொண்டையை அடைந்தவுடன் அனைவருக்கும் பயமற்றதாகத் தோற்றமளித்தது. இறைவனைச் சரணடைந்தோருக்கு எவரிடமிருந்தும் பயமிருக்காது. அவர்களாலும் உலகத்திற்கு அச்சமிருக்காது.

உலகங்களை எல்லாம் முதலில் பயமுறுத்திய விஷத்தை சிவன் அடக்கிக் குடிக்கையில் அவருடைய உடல் மேலிருந்த பாம்புகளோ தலைமேலிருந்த சந்திரனோ அசையவுமில்லை, வாடவுமில்லை, ஏன்? சிவனை சரணடைந்தவன் எதற்கும் அஞ்ச மாட்டான், அதிர்ச்சியடைய மாட்டான், அடிபடவும் மாட்டான். அதனால் சிவனைச் சரணடைந்த சர்ப்பங்களும் சந்திரனும் நலமோடும் தைரியத்தோடுமிருந்தன.

விஷத்தை அடக்கிய அம்ருதேஸ்வரனின் அருளால் ஆதி வியாதிகளை நீக்கிக்கொண்டு, எம வேதனைகளை விலக்கிக் கொள்ள முடியும். ஆயுர் வேத நூல்களில் சரக சம்ஹிதையைப் போலவே மிகப் பிரசித்தமான வைத்திய சாஸ்திர நிபுணரான ஸ்ரீபசவராஜு என்ற அறிஞர் உலக நன்மைக்காக சமஸ்கிருதத்தில் ‘பசவ ராஜீயம்’ என்ற நூலை எழுதியுள்ளார்.

அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த சரகம், மாதவ கல்பம், பைரவ கல்பம், அஸ்வினீயம், ஆயுர்வேத சிந்தூர மணிதர்பம், சிகிச்தாசார சித்த சங்க்ரஹம். போன்ற பல நூல்களை நுணுக்கமாக ஆராய்ந்து பல நோய்களுக்கும் நிதானம், சாத்திய, அசாத்திய லக்ஷணங்கள், சர்வரோக சிகிச்சைகள் போன்றவற்றை பசவராஜீயம் என்ற நூலில் பத்திரப்படுத்தியுள்ளார் ஸ்ரீபசவராஜு.

‘வித்வத் சிந்தாமணி’ யான ஸ்ரீமத்பசவராஜு சிறந்த சிவபக்தர். அவர் எழுதிய பஸவராஜீயம் என்ற நூலில் 25 அத்தியாயங்கள் உள்ளன. அனைத்து அத்தியாயங்களிலும் முதல் ஸ்லோகம் சிவனை துதித்து தொடங்குவது சிறப்பு. அதனால் இந்த மகாத்மாவுக்கு உள்ள பல விருதுகளுள் ‘ஸ்ரீநீலகண்ட சரணாரவிந்த தீர்த்தப் பாராவார’ என்பது முக்கியமானது.

பிரார்த்தனை ஸ்லோகங்களாக ஸ்ரீபசவராஜூ எழுதிய சுலபமான இருபத்தைந்து சமஸ்கிருத ஸ்லோகங்களைப் படித்து நோய் நீங்கி ஆரோக்கியத்தைப் பெறமுடியும். அவற்றைப்
பார்ப்போமா?

ஸ்ரீநீலகண்ட புஜகேந்தத்ர பூஷம் நாகாஜினம் ராஜ களாகலாபம்
கௌரீஸ்வரம் தேவ முனீந்த்ர ஸேவ்யம் தேவம்பஜே ஸ்ரீகிரிஜாதி நாதம் II

பொருள்: அழகான நீல கழுத்துடன், உயர்ந்த நாகங்களை ஆபரணங்களாக அணிந்தவன், யானைத் தோலணிந்தவன், சந்திரகலா பூஷ்ணன், பார்வதீபதி, நாரதர் போன்ற முனிவர்கள் வணங்கும் கைலாசபதி ஆகிய பரமேஸ்வரனை நான் பூஜிக்கிறேன்.

க்ருத்திவாஸம் புராராதி மந்தகாஸுர பஞ்சனம்
பர்கம் சைல ஸுதாதீஸம் நீலகண்ட மஹம் பஜேII

பொருள்: யானைத்தோல் அணிந்தவன், திரிபுராந்தகன், அந்தகாசுர சம்ஹாரி, சகல உலகங்களாலும் பூஜிக்கப் படுபவன், பார்வதியின் பதி ஆகிய நீலகண்டனை நான் பஜனை செய்கிறேன்.

தக்ஷ யக்ஞாபஹாரம் ச ஸர்வதேவ மதாபஹம்
வீர சூடாமணிம் வீரம் வீரபத்ர மஹம் பஜே॥

பொருள்: தக்ஷ யக்ஞத்தை அழித்தவன், இந்திரன் முதலான தேவதைகளின் அகங்காரத்தை அடக்கிய சூரர்களுள் முதல்வன், ஒளி பொருந்தியவன் ஆகிய வீரபத்திரனை நான் பூஜிக்கிறேன்.

பிரம்ம விஷ்ணு ஸுராதீச ஸேவ்ய பாத ஸரோருஹம்
பராத்பரதரம் தேவம் நீலகண்ட மஹம் பஜே॥

பொருள்: சதுர்முக பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் இவர்களால் சேவிக்கப்படும் பாத பத்மங்களுடையவன். ஹிரண்யகர்பனை விட உயர்ந்தவன், சுயம் பிரகாச சொரூபன் ஆகிய நீலகண்டனை நான் துதிக்கிறேன்.

நந்தீஸ ஸேஷ ஸீதாம்ஸு ஸிம்ஹ கர்பூர ஸாரசை:
சந்தனேன ச துல்யாங்கம் நீலகண்ட மஹம் பஜே॥

பொருள்: நந்தீஸ்வரன், ஆதிசேஷன், சந்திரன், சிம்மம், கர்பூரம், தாமரை, சந்தனம் இவற்றைப் போன்ற உடல் கொண்ட நீலகண்டனை நான் பூஜிக்கிறேன்.

வ்ருஷேந்த்ர காமினம் ஸுப்ரம் ஸர்வேஸம் பக்தவத்சலம்
பூதேஸம் லோக கர்தாரம் நீலகண்ட மஹம் பஜே॥

பொருள்: உயர்ந்த விருஷபத்தின் மேலேறி சஞ்சாரம் செய்பவன், சுபகரன், ஜகதீஸ்வரன் பக்தர்களிடம் வாத்சல்யம் கொண்டவன், பூதங்களுக்குப் பிரபு, ஜகத்தின் ஸ்ருஸ்டி, ஸ்திதி, சம்ஹாரம் செய்பவனாகிய நீலகண்டனை நான் வணங்குகிறேன்.

சூலினம் மேரு கோதண்டம் பத்மலோசன ஸாயகம்|
த்ரிபுராஸுர ஸம்ஹாரம் நீலகண்டம் மஹம் பஜே॥

பொருள்: சூல ஹஸ்தன், மேரு பர்வதத்தை வில்லாகக் கொண்டவன், ஸ்ரீமஹா விஷ்ணுவையே பாணமாகக் கொண்டவன், திரிபுராசுரர்களை சம்ஹரித்தவனான நீலகண்டனை நான் துதிக்கிறேன்.

கட்வாங்க தாரிணம் ருத்ரம் சந்த்ர ஸூர்யாக்னி லோசனம் |
விஷ்ணு வல்லப மீஸானம் தேவதேவ மஹம் பஜே॥

பொருள்: கட்வாங்கமே ஆயுதமாகக் கொண்டவன், சந்திரன், சூரியன் அக்னி இவற்றைக் கண்களாக கொண்டவன், விஷ்ணு மூர்த்திக்குப் பிரியமானவன், சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டுள்ள சகல தேவதைகளுக்கும் பிரபுவான ஈஸ்வரனை நான் துதிக்கிறேன்.

ஸர்வக்ஞம் ஸச்சிதானந்தம் லோகநாதம் ஜகத்குரும்|
வ்யோமகேஸம் பவானீஸம் ராஜபூஷமஹம் பஜே॥

பொருள்: சர்வக்ஞன், சச்சிதானந்த சொரூபன், லோகேசன், ஜகத்குரு, ஆகாசமே கேசமாகக் கொண்டவன், பார்வதியின் பிரபு, சந்திரனை அலங்காரமாக தரித்தவன் ஆகிய இறைவனை நான் பூஜிக்கிறேன்.

மஹாதேவம் விரூபாக்ஷம் ஸங்கரம் பரமேஸ்வரம் |
தேவேஸம் கருணா பாங்கம் ஜகதீச மஹம் பஜே॥

பொருள்: மகாதேவன், விரூபாக்ஷன், சங்கரன், கருணாரசம் நிறைந்த கடைக்கண் பார்வை கொண்டவன், ஜகதீஸ்வரனான பரமேஸ்வரனை நான் துதிக்கிறேன்.

சங்கரம் நிர்மலாகாரம் பாலசந்தர களாதரம்
ஸ்தாணும் சோமாபதிம் ஸர்வம் பஜேஹம் மல்லிகார்ஜுனம்॥

பொருள்: சுககரன், நிர்மல சொரூபன், பாலச்சந்திரனை அணிந்தவன், அசஞ்சலன், பார்வதீ வல்லபன், ஈஸ்வரனான மல்லிகார்ஜுனனை நான் பூஜிக்கிறேன்.

நீலகண்டம் மஹாதேவம் தாரகம் கருணார்ணவம்
தேவேஸம் பக்த மந்தார மஷ்டமூர்தி மஹம் பஜே॥

பொருள்: மகாதேவன், சம்சார தாரகன் (சம்சாரக் கடலைத் தாண்டுவிப்பவன்) கருணாகரச பரிபூரணன், அஷ்ட மூர்த்தி சொரூபன் ஆகிய நீலகண்டனை நான் துதிக்கிறேன்.

மகாதேவம் மஹாத்மானம் தேவேஸம் சேஷ பூஷணம்
சங்கரம் பார்வதீநாதம் நீலகண்டமஹம் பஜே॥

பொருள்: தேவதைகளுள் பெரியவன், மகாத்மா, தேவதைகளின் பிரபு, நாகாபரணன், பக்தர்களுக்கு சுகமளிக்கும் பார்வதீநாதன் ஆகிய நீலகண்டனை நான் பூஜிக்கிறேன்.

ஸ்ரீஜங்கமமேஸ பாதாப்ஜ ப்ருங்கம் ஸுத்தம் மகேஸ்வரம்|
ஸ்ரவஜ்ஞம் ஸகலாதாரம் பஸவேஸ மஹம் பஜே॥

பொருள்: ஜங்கமேஸ்வரனின் பாத பத்மங்களை சேவிப்பன், சுத்தன், மகேஸ்வரன், சர்வக்ஞன், ஸகல ஜகத்திற்கும் ஆதாரபூதம் ஆகிய பஸவேஸ்வரனை நான் பூஜிக்கிறேன்.

சர்வக்ஞன் ஜகதாதாரம் சூலஹஸ்தம் நகேஸ்வரம்
முக்தி ப்ரதாயகம் தேவம் நீலகண்டமஹம் பஜே

பொருள்: சர்வக்ஞன், ஜகத்திற்கு ஆதாரபூதம், சூலஹஸ்தன், கைலாசபதி, முக்திப் பிரதாதா, சுயம்பிரகாச பூதம் ஆகிய நீலகண்டனை நான் நமஸ்கரிக்கிறேன்.

ஸம்பும் பினாகினம் பாலச்சந்திர பூஷம் க்ருபார்ணவம்|॥
ஸர்வ பாப ஹரம் நித்யம் நீலகண்டமஹம் பஜே॥

பொருள்: சுக சொரூபன், பினாகம் என்ற வில்லை ஏந்தியவன், பாலச்சந்திரனை அலங்காரமாகக் கொண்டவன், கருணா பரிபூரணன், அனைத்து பாதகங்களையும் விலக்குபவன், ஆதி அந்தமில்லாதவன் ஆகிய நீலகண்டனை நான் துதிக்கிறேன்.

வீரபத்ரம் விரூபாக்ஷம் நாரசிம்ஹ மதாந்தகம்|
அஹி பூஷம் சுபாகாரம் பஜேஹம் வீர சேகரம்॥

பொருள்: விஷமப் பார்வை கொண்டவன், நரசிம்மனின் மதத்தை அடக்கியவன், சர்ப்பங்களை பூஷணங்களாக அணிந்தவன், மங்களகரமான உருவம் கொண்டவன், சூரர்களில் முதல்வன் ஆகிய வீரபத்திரனை நான் துதிக்கிறேன்.

பூதேஸம் ஸர்வபூதேஸம் நாயகம் ஸர்வ நாயகம்|
தேவதேவம் மஹாதேவம் ஸம்பு மூர்தி மஹம் பஜே॥

பொருள்: பூதப் பிரேத பிசாசுகளுக்குப் பிரபு, பஞ்ச பூதங்களுக்கு தலைவன், அனைத்து உலகங்களுக்கும் பிரபு, சர்வ தேவதைகளுக்கும் தெய்வம், மகாதேவன் ஆகிய பரமேஸ்வரனை நான் நமஸ்கரிக்கிறேன்.

கந்தர்ப நாக பஞ்சாஸ்யம் கஜ தைத்ய விநாஸனம்|
மகா தாண்டவ ஸாலீனம் லிங்கமூர்தி மஹம் பஜே॥

பொருள்: மன்மதனை வென்றவன், கஜாசுரனை சம்ஹரித்தவன், நடனப் பிரியன், லிங்க சொரூபன் ஆகிய பரமேஸ்வரனுக்கு என் நமஸ்காரங்கள்.

பைரவம் பைரவாகாரம் வீரம் வீரேஸ்வரம் ப்ரபும்
ருத்ரம் ருத்ரகணாதீஸம் வீரபத்ர மஹம் பஜே॥

பொருள்: பைரவன் என்று பெயர் கொண்டவன், பயங்கர சொரூபமுள்ளவன், சூரன், வீரேஸ்வரன், ஜகத் பிரபு, ருத்ர கணாதிபதி ஆகிய வீரபத்திரனை நான் துதிக்கிறேன்.

பூரதம் மேரு கோதண்டம் வேதாஸ்வம் புர நாஸகம்
ஸர்வலோக பதிம் ஸம்பும் லிங்க மூர்த்திமஹம் பஜே॥

பொருள்: பூமியே ரதமாக கொண்டவன், மேரு பர்வதமே வில்லாக, வேதங்களே குதிரைகளைக் கொண்டு திரிபுராசுரனை சம்ஹரித்தவன், அனைத்து உலகங்களுக்கும் பிரபுவாகிய லிங்க சொரூபமான சிவனை நான் பூஜிக்கிறேன்.

ஜகத்காரண மீஸானம் ஜடாமண்டல மண்டிதம
வ்யாக்ர சர்மாம்பரதரம் லிங்கமூர்த்தி மஹம் பஜே !!

பொருள்: ஜகத் காரணபூதன், ஜகத் பரிபாலகன், ஜடா மண்டலமுடையவன், புலித்தோல் தரித்தவன், லிங்க சொரூபன் ஆகிய சிவனை நான் வணங்குகிறேன்

பாலச்சந்திர களா மௌளிம் புஜகேந்த்ர விபூஷணம்
தாரகம் ஸச்சிதானந்தம் லிங்கமூர்த்தி மஹம் பஜே॥

பொருள்: பாலச்சந்திரனை தலைமேல் அணிந்தவன், சர்ப்பங்களை ஆபரணங்களாக உடையவன், ஜகத்தினை உய்விப்பவன், சச்சிதானந்த சொரூபன், லிங்க வடிவமமுடையவன் ஆகிய பரமேஸ்வரனை நான் வணங்குகிறேன்.

அம்பிகாபதி மீஸானம் சந்திரசேகர மச்யுதம்
பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் நீலகண்ட மஹம் பஜே॥

பொருள்: பார்வதி வல்லவன், ஜகத்தினை இயக்குபவன், சந்திரனை தலைமேல் அணிந்தவன், அழிவற்றவன், உடல் முழுவதும் சாம்பலைப் பூசியவன் ஆகிய நீலகண்டனே நான் வணங்குகிறேன்.

விஸ்வநாதம் ஜகந்நாதம் லோகநாதம் ஜகத்குரும்|
ஸர்வஜ்ஞம் பார்வதீ நாதம் லிங்கமூர்த்தி மஹம் பஜே॥

பொருள்: சர்வ உலங்களுக்கும் பிரபு, அசைகின்ற பிரபஞ்சத்திற்கு நாயகன், அசையாத பிரபஞ்சத்திற்கு பிரபு, ஜகத்குரு, லிங்கமூர்த்தி சொரூபன் ஆகிய பார்வதீபதியை நான்
பூஜிக்கிறேன்.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

Leave a Reply