வீரராகவ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக தேர் திருவிழா துவக்கம்

செய்திகள்

திருப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோயில் மற்றும் விஸ்வேஸ் வரர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாகத்தன்று தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி விசாக தேர்திருவிழா ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

அதையொட்டி, கோயில் அறங்காவலர் குழு, திருப்பணிகள் குழு சார்பில் முகூத்த க்கால் நடப்பட்டது. முன்னதாக, பெருமாள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, லட்சுமி ஹயக்ரீவர் சன்னதிகளின் நிலவு கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Leave a Reply