பரமக்குடி ஈஸ்வரன் கோவில் கொடியேற்றம்

செய்திகள்

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நந்திகேஸ்வரர், கிளி, குண்டோதர வாஹனம், சிம்ம வாஹனம், கைலாச கற்பக விருஷம், அன்னவாஹனம், ராவண கைலாசம், காமதேனு வாஹனம், குதிரை ஆகிய வாகனங்களில் நாட்டாண்மை தெரு, ரத வீதியில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

ஏப்ரல் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை தபசு கமல வாஹனத்தில் விருஷப வாஹன காட்சி கொடுத்தல் மாலை மாற்றல் நிகழ்ச்சியும், 16-ம் தேதி சனிக்கிழமை காலை 10.3 0 முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், பட்டணப்பிரவேசமும், யானை வாஹனம், புஷ்பபல்லக்கில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறவுள்ளது. ஈஸ்வரன் கோவில் சித்திரை பிரஹ்மோத்ஸவ விழாவினை ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி கே.கே.பாபுஜி, டிரஸ்டி மற்றும் டிரஷரர் என்.கே.தியாகராஜன், டிரஸ்டிகள் எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Leave a Reply