மயிலாப்பூர் கற்பகாம்பாளுக்கு கிரீடம்

செய்திகள்
தங்க கிரீடம்சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வர் கோயில் அருள்மிகு கற்பகாம்பாளுக்கு ரூ. 45 லட்சம் செலவில் புதிய கிரீடம் (படம்) வழங்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூரில் உள்ள சுக்ரா ஜூவல்லரி இந்தக் கிரீடத்தை தயாரித்துள்ளது. திருக்கல்யாண உற்சவத்தின்போது,வெளிநாடு வாழ் இந்திய பக்தர் ஒருவர் இந்த கிரீடத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

22 காரட் தங்கத்தில் 1.2 கிலோ எடையில், 3 4 காரட் மதிப்புள்ள 840 வைரக்கற்கள் பதித்த கிரீடம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் விலை மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 3 மாதங்களில் கிரீடத்தை தயாரித்ததாக அதனைத் தயாரித்த கலைஞர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply