காரைக்கால் பார்வதீசுவர சுவாமி கோயிலில் சூரிய பூஜை

செய்திகள்

/latestnews_karaikkal_sivatemple.jpg" border="0" style="float: right; margin: 3px;" width="250" height="211" />திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம் இது. மழையில்லாத காலத்தில் கஷ்டப்பட்ட விவசாயிகளுக்காக மழையைப் பொழிய வைத்து, தாமே உழவனாக வந்து தரிசனம் தந்தார் சிவபெருமான்.  இத்தகைய சிறப்புக்கு உரிய கோயில் இது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 7 நாள்கள் மாலை வேளையில் சிவலிங்கத்தை சூரியன் வழிபடும் விதமாக சூரிய பூஜை நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்கியது.

சிவலிங்கம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுமார் 5.50 மணியளவில் சூரியன் மறையும் நேரத்தில், சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழுந்தது. அப்போது சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Leave a Reply