திருப்பதி: பிரம்மோற்ஸவத்திற்கு தயாராகும் கோதண்டராமர் ஆலயம்

செய்திகள்

9 நாள்கள் நடக்க உள்ள இந்த விழாவில் மிக முக்கிய சேவைகளாக கருதப்படும் கருட சேவை ஏப்ரல் 5-லும், திருத்தேர் உற்ஸவம் ஏப்ரல் 8-லும், நன்னீராட்டு விழா ஏப்ரல் 9-லும் நடைபெற உள்ளது.

மேலும் பிரம்மோற்ஸவத்தை அடுத்து ஏப்ரல் 12-ல் ஸ்ரீராம நவமியும், ஏப்ரல் 13-ல் சீதா ராமர் திருக்கல்யாணம் மற்றும் ஏப்ரல் 14-ல் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நடக்க உள்ளது.

இந்த திருவிழாவையொட்டி ஏப்ரல் 15,16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தெப்பஉற்ஸவம் நடைபெற உள்ளது. அடுத்தடுத்து நடக்க உள்ள இத்திருவிழாக்களுக்காக ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத்தை தூய்மை செய்து வண்ணக் கோலங்கள் போடப்பட்டுள்ளது. மேலும் சாமியின் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Leave a Reply