682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூரத் திருவிழா வருகிற ஜூலை 28-ஆம் தேதி ஆடி பூரம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.
இதற்காக கடந்த ஜூன் 6-ஆம் தேதி ஆடிப்பூரப் பந்தல் அமைத்து, தேருக்கு முகூா்த்தக் கால் நட்டு, தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கின. வருகிற ஜூலை 20-ஆம் தேதி ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 28ல் தேரோட்டம் நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் தேரோட்ட திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநில பக்தர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்நிலையில் இந்த ஆண்டும் ஜூலை 20 காலை 7:00 மணிக்குமேல் 8:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் ஆடிப்பூரத் திருவிழா துஷாரோகணத்துடன் துவங்குகிறது. அன்று இரவு 10:00 மணிக்கு பதினாறு வண்டி சப்பர விழா நடக்கிறது.
ஜூலை 24 காலை 10:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10:00 மணிக்கு 5 கருட சேவையும், ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரங்க மன்னார் சயனத்திருக்கோலமும், ஜூலை 28 காலை 9:10 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. ஜூலை 31 மாலை 6:00 மணிக்கு புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், சதுரகிரி கோயிலில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது. ஆண்டாள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தயாராகி வரும் தேரையும் தேர் வரும் பாதைகளான ரத வீதிகளையும் கலெக்டர் சுக புத்திரா, எஸ்பி கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவகாசி சப் கலெக்டர் பாலாஜி, இந்து அறநிலையத்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. ஆடி அமாவாசை 24ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று தாணிப்பறை அடிவாரப் பகுதி மற்றும் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் சுகபுத்ரா ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.
தற்காலிக பஸ் ஸ்டாண்ட், மருத்துவ வசதி, பக்தர்களுக்கு தேவையான தங்கும் வசதி, கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட எஸ்.பி கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் தேவராஜ், வத்திராயிருப்பு தாசில்தார் ஆண்டாள், திட்ட இயக்குனர் கேசவதாசன், கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், சதுரகிரி கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சந்திரகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.