682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

மதுரை மாவட்ட கோயில்களில், ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை மை, ஒட்டி, வராஹி அம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பெண்கள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வைத்து வழிபட்டனர்.
இதேபோல் மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு கோயில் அர்ச்சகர் சிறப்பு அபிஷேகங்களை செய்தார்.
மதுரை வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு. பூஜைகளை அர்ச்சகர் காந்தன் செய்தார்.
நிர்வாகிகள் முத்துக்குமார், மணி மாறன் ஆகியோர்கள், பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.
மதுரை ஆவின் சாத்தமங்கலம் அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில், ஈஸ்வர பட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.
மதுரை அண்ணாநகர் யாணைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், பட்டர் மணி கண்டன் முத்து மாரியம்மனுக்கு, சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில்
பழமையும் பெருமையும் வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனை செய்யப்பட்டது.
இந்த பூஜையினை, கோவில்பட்டர் கிருஷ்ணமூர்த்தி செய்தார். இதில், ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.