புரட்டாசி மாதம், பெருமாளுக்கு மிக உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு கல்யாண வேங்கடரமண ஸ்வாமி ஆலயத்தில், புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், தங்களது குடும்பத்துடன், ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தியும் , பாத காணிக்கை செய்தும், அன்னதானம் வழங்கியும் தங்களுடைய நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, கரூர் மாவட்டம் மட்டுமல்லாது, அருகில் உள்ள நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்
இருந்து ஏராளமான ஆன்மீக அன்பர்கள், ஆலயத்துக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, போலீசார் சீசீடிவி கண்காணிப்பு கேமராவுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தான்தோன்றிமலை, கல்யாண வேங்கடரமண சுவாமி ஆலய, செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.