682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

அலங்காநல்லூர் அருகே கோவிலூரில் அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் உற்சவ விழா
மதுரைமாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் திருக்கோவில் பங்குனி மாத உற்சவ விழா வெகு சிறப்பாக நடந்தது முதல் நிகழ்ச்சியாக கம்பத்தடியான் கோவிலில் சிறப்பு பூஜையும் அன்னதானம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து அம்மன் புறப்பாடாகி பெரிய இலந்தைகுளம் சென்று கரகம் ஜோடிக்கு தீவட்டி பரிகாரங்களுடன் கோயில் வந்து சேர்ந்தது அதிகாலை மாவிளக்கு எடுத்தல் பொங்கல் வைத்தால் கிடா வெட்டுதல் அக்கினி சட்டி எடுத்தல் உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
மந்தை திடலில் 200 க்கும் மேற்பட்ட பெண் பொங்கல் வைத்து கோவில் முன்பாக வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர் அன்று இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து பல்லயம்பிரித்து மஞ்சள் நீராடத்துடன் திருவிழா நிறைவு பெற்றது விழா ஏற்பாடுகளை கோவிலூர் கிராம பொதுமக்கள் மற்றும் கிராம மரியாதைக்காரர்கள் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் போலீசார் செய்திருந்தனர்.
சிந்தாமணி சின்ன அனுப்பானடி மகாகாளியம்மன் திருக்கோவில் பங்குனி உத்ஸவ பெருவிழா
சிந்தாமணி சின்ன அனுப்பானடி மகாகாளியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ பெருவிழா – பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் தரிசனம்!
மதுரை மாவட்டம், சிந்தாமணி சின்ன அனுப்பானடி பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற பழமையான ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ விழா கடந்த 1ந் தேதி கொடியேற்றத்துடன் பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து, திருக்கோவில் முன்பாக கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி மிக விமர்சியாக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், சிந்தாமணி சின்ன அனுப்பாணடி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக பக்தி பரவசத்துடன் சாமியாடியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய பால் அம்மனுக்கு மனம் குளிர பாலபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலம் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்வு திருவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சாஸ்தா அப்பளம் உரிமையாளர் மணிகண்டன் நீர் மோர் தண்ணீர் பழம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
திருவிளக்கு பூஜை
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், தாதகவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துக்கருப்பணசாமி, ஸ்ரீகன்னிமார்
சுவாமி பங்குனி திருவிழாவையொட்டி, திருவிளக்குபூஜை நடந்தது. அலங்காநல்லூர் தர்மசாஸ்தா கோவில் நிறுவனர் ஏ.எல்.சீனிவாசன் தலமையில் நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, கிராம மரியாதைக்காரர்கள் கிராம விழா கமிட்டி நண்பர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.