இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சபரிமலையில் நாளை (ஜன.19) இரவு வரை பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது.

சபரிமலையில் நெய் அபிஷேகம் இன்று நிறைவடைய உள்ள நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் இருந்தே பம்பை – சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. நெய் அபிஷேகம் செய்ய இன்று அதிகாலை 2 மணிக்கே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலை வரை நெய் அபிஷேகம் செய்து சென்றனர். ஜன.19ல் ஐயப்பனுக்கு எந்த அபிஷேகமும் கிடையாது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மட்டும் செய்யலாம்.

சபரிமலை மகரவிளக்கு மஹோத்ஸவத்தின் ஓர் அங்கமான தரிசனம் ஜனவரி 19ம் தேதி இரவு முடிவடைகிறது. இன்று மாலை 6 மணி வரை பக்தர்கள் பம்பை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சன்னிதானத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே ஐயனை தரிசனம் செய்ய முடியும். 19ம் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பின் மணிமண்டபம் முன் நடக்கும் குருதி பூஜையுடன் மகரவிளக்கு உத்ஸவம் நிறைவு பெறும்.

ஜனவரி 20ம் தேதி பந்தளம் பிரதிநிதி மட்டும் வருகை தருவார். காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் முடிந்து திருவாபரண ஊர்வலம் புறப்படும். மன்னர் பிரதிநிதி தரிசனம் முடிந்து, 6:30 மணிக்கு மேல்சாந்தி ஐயப்பன் சிலைக்கு விபூதி அபிஷேகம் செய்து, ஹரிவராசனம் அணிவித்து திருநடையை அடைப்பார்.

ஜனவரி 18ம் தேதி இன்று காலை 10.30 மணிக்கு நெய் அபிஷேகம் நிறைவடைகிறது. பின்னர் பந்தளம் அரச பிரதிநிதி முன்னிலையில் களபாபிஷேகம் நடைபெறும்.

இன்றிரவு மணிமண்டபம் களைகட்டுதல், சந்நிதிக்கு தீபம் ஏற்றுதல் ஆகிய வழிபாடுகளுடன் நிறைவடையும். நாளை ஜன.19ம் தேதி இரவு சரம்குத்தியில் சிறப்பு வழிபாடு, இரவு மளிகைபுறம் மஞ்சமாதாவுக்கு குருதி பூஜை வழிபாடு ஆகியவை நடைபெறும்!

Leave a Reply