682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் புதிய மேல் சாந்தி தேர்ந்தெடுப்பு மற்றும் ஐப்பசி விசு பூஜை வழிபாடுகளுக்காக சபரிமலை கோவில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ள நிலையில் புதிய மேல் சாந்தியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஆயத்தமாகியுள்ளது.
புதிய மேல் சாந்தியை தேர்ந்தெடுப்பதற்கு பந்தளம் அரண்மனையை சேர்ந்த சிறுவர்கள் ரிஷிகேஷ் வர்மாவும், வைஷ்ணவியும் சபரிமலை – மாளிகப்புரம் மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்க இருமுடிக்கட்டி சபரீசன் சன்னிதிக்கு புறப்பட்டு வந்தடைந்தனர்.
உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் அமைந்துள்ளது
இங்கு மூலஸ்தானத்தில் சபரிமலை ஐயப்பன் மற்றொரு சன்னிதானத்தில் மளிகைபுரம் மஞ்ச மாதாவும் அருள்பாலித்து வருகின்றனர்.
இருவருக்கும் பூஜைகள் செய்ய மேல் சாந்திகள் தலைமை பூசாரிகளாக நியமிக்கப்படுகின்றனர் . இவர்கள் பதவிக்காலம் ஒரு ஆண்டு மட்டுமே ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் ஐப்பசி மாதம் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்போது ஐப்பசி மாதப்பிறப்பன்று திருஉளச்சீட்டு குலுக்கல் மூலம் சன்னிதானம் முன் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
இதற்கான ஆயத்த பணிகளை திருவாங்கூர் தேவசம்போர்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவக்கி சபரிமலை மற்றும் மளிகைபுரம் மேல் சாந்திக்கு பதவி மேல் சாந்திக்கு பதவி ஏற்க தகுதியானவர்கள் பலர் விண்ணப்பித்திருந்தனர் .
இவர்களை தேர்வு செய்வதற்காக பந்தள அரண்மனை நிர்வாகமும் திருவாங்கூர் தேவசம்போர்டு கேரள இந்து அறநிலைத்துறையும் சேர்ந்து ஒவ்வொரு விண்ணப்பதாரர்களையும் நேர்முகத் தேர்வு செய்து விண்ணப்பம் செய்தவர்களில் சபரிமலைக்கு 10 பேர்களையும் மளிகை புரம் கோவிலுக்கு 10 பேரையும் தேர்வு செய்தனர்
இந்த 10 பேர் பெயர்கள் பேப்பரில் எழுதி சுருட்டி போட்டு ஒரு வெள்ளி செம்பு பாத்திரத்தில் ஐயப்பன் சன்னதி முன் வைக்கப்படும் இதே போலே மளிகைபுரம் மஞ்ச மாதா கோவிலுக்கும் வைக்கப்படும் .
இந்த திருஉள சீட்டை பந்தள அரண்மனை வழியினர் குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கடும் விரதம் இருந்து வந்து தேர்வு செய்வார்கள் இந்த தேர்வு நாளை நடக்கிறது
இதற்காக சபரிமலை கோயிலுக்கு விரதம் இருந்த இவர்கள் நாளை காலை பூஜைக்குப் பின்பு திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் புதிய மேல் சாந்தியை தேர்ந்தெடுப்பார்கள்
ஒரு சீட்டில் வரும் பெயரில் எடுக்கும் போது மற்றொரு பாத்திரத்தில் மேல் சாந்தி என எழுதப்பட்ட பேப்பரும் வந்தால் அவரை மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
ஒரு சீட்டில் ஒருவரது பெயர் வரும்போது மற்றொரு பாத்திரத்தில் உள்ள சிட்டி வெள்ளை பேப்பரில் வந்தால் அவர் நிராகரிக்கப்படுவார்.
இது காலம் காலம் தொட்டு நடத்தப்படும் ஒரு சம்பிரதாய நிகழ்வாகும் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மேல் சாந்தி வரும் கார்த்திகை மாதம் முதல் ஐப்பசி மாதம் வரை ஒரு ஆண்டு பதவியில் இருப்பார்.