682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
உசிலம்பட்டி அருகே கோயில் மகா கும்பாபிஷேகம்
உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொறுப்பு மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனசாமி, சின்னகருப்பசாமி, வீர கொண்டம்மாள் சாமி திருக்கோவில்.,இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.,
முன்னதாக கடந்த 13ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கி மூன்று கால யாக பூஜைகளை செய்த சிவாச்சாரியார்கள், இன்று கோவிலின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.,
பின்னர் கருவறையில் உள்ள பெத்தனசாமி, சின்னகருப்பசாமி, வீர கொண்டம்மாள் சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
,இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர்.,
தாராப்பட்டி அருள்மிகு ஸ்ரீ கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்:
மதுரை மாவட்டம் தாராப்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .
தாராப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமலை நாயக்கரால் வெயிலான் காணி என்று செம்பு பட்டையும் வழங்கப்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.
கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் இதற்கான கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் வெயிலான் வகையறா பங்காளிகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
கடந்த 13-ஆம் தேதி காலை 9 மணிக்கு மங்கள இசை உடன் விநாயகர் பூஜை லட்சுமிஹோமம் சுதர்சன ஹோமம் ஆரம்பிக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் ஆரம்பமாகியது தொடர்ந்து, மாலை 6 மணிக்கு தீர்த்த சங்கமம் யாகசாலை பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ,14 ஆம் தேதி காலை வேத பாராயணம் மூல மந்திர ஹோமம் மற்றும் முதல் கால பூர்ணாஹதி பூஜையுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனைத்து தெய்வங்களின் மூல மந்திர ஹோமம் வஸ்திரம் பிரதிஷ்டையுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது
கும்பாபிஷேகத்தை அர்ச்சகர் சந்தோஷ் குமார் சர்மா முன்னின்று நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை, வெயிலான் வகையறா பங்காளிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.