குரு பக்தி இல்லை என்றால் வாழ்க்கை வீண்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் அருளுரைகள்!

“மனிதனின் ஜீவிதத்திலே எவ்வளவோ முன்னுக்கு வந்தாலும் குருபக்தி என்ற ஒன்று இல்லையென்றால் அவனுடைய வாழ்க்கை வீண்தான்” என்று பகவத்பாதாளே சொன்னார். அதனால் நாம் எவ்வளவு பெரிய மனிதரானாலும் எவ்வளவு பெரிய படித்தவர்களானாலும் எவ்வளவு பணக்காரர்கள் ஆனாலும் குருபக்தி என்பது பரம அவசியம்.

“ஸம்ப்ரதாய பரிபாலன புத்த்யா” என்றபடி சங்கரர் தம்முடைய குருவாகிய கோவிந்தபகவத்பாதாளை அத்யந்த ஸ்ரத்தா பக்திகளோடு சேவித்தார் என்கிறபோது நமக்கும் குருபக்தி பரம அவசியம் என்று தனியாக சொல்ல வேண்டியதே இல்லை.

அந்த குருபக்திதான் நமக்கு எல்லாவிதமான சிரேயஸ்ஸை உண்டாக்கும். பரமேஷ்டி குருநாதர் ஸ்ரீ ந்ருஸிம்ஹ பாரதீ மஹா ஸ்வாமிகள் ஓரிடத்திலே, “குருவினுடைய அனுக்ரஹம் இல்லாவிட்டால் உலகத்திலே யாருக்குத்தான் இஷ்டார்த்தங்கள் கிடைக்கும்? ஆகையினால், எல்லா செளக்கியங்களுக்கும் எல்லா நன்மைகளுக்கும் மற்றும் எல்லா சிரேயஸ்களுக்கும் மூல காரணமான குருபாதத்தை நீ வழிபடு” என்று உபதேசம் பண்ணினார்.

நமக்கு மஹான்கள் எல்லாம் உபதேசம் பண்ணுவது நாம் நன்றாக இங்கு சிரேயஸ்ஸை அடைய வேண்டும் என்பதற்காகத்தான். அவர்களுடைய உபதேசங்களை அனுசரித்து நாம் நம் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தால் நமக்கு நன்மை விளையும். அப்படி அவற்றைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் நமக்குத்தான் இழப்பு! அவர்களுக்கு ஒன்றும் இல்லை..


யம் ஹி ரக்ஷிதுமிச்சந்தி புத்த்யா ஸம்யோஜயந்தி தம் II
நாம் நற்காரியங்களில் இயங்குவதற்கான பிரேரணையை இறைவன் கொடுக்கிறான்..

மனிதன் எந்தக் காரியத்தில் இறங்க விரும்பினாலும் அதற்கு முதலில் அவனது மனதில் அக்காரியத்தைப் பற்றிய ஓர் எண்ணம் தோன்ற வேண்டும். பிறகுதான் காரியத்தில் இறங்க முடியும். மனதில் எண்ணங்களைத் தோன்ற வைப்பதே இறைவன் தான்..

ஆகவே, இறைவன் இருக்கிறான் என்ற விஷயத்தில் யாருக்கும் சந்தேகமே தேவையில்லை..

எத்தனையோ மஹான்கள் இறைவனின் தரிசனத்தைப் பெற்றார்கள்.. நமக்கு அவனது தரிசனம் கிடைக்காததற்குக் காரணம், நாம் நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்த வழியை – ஸாதனையை – கடைப்பிடிக்காததேயாகும்.

author avatar

Leave a Reply