ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

srivilliputhur muhurthakkal ani swathi utsav

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி பூரதேரோட்டம் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வெகு சிறப்பு பெற்றதாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக சிறப்பு வாய்ந்த இங்கு, ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று
ஆண்டாள் அவதரித்த நாளின் போது மிக பிரமாண்டமான தேரில் ஆண்டாளும் ரங்க மன்னரும் எழுந்தருள்வர்.

இந்தத் தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகள் வழியே நிலைக்கு சேர்ப்பார்கள். இந்தத் திருவிழா விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே மிக குறிப்பிடத்தக்க விழாவாகவும் உள்ளது.

இந்த ஆண்டு ஆடிப்பூர தேர்த் திருவிழாவிற்கான முகூர்த்தக் கால் நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

முன்னதாக ஆண்டாள் சந்நிதியில் விஸ்வரூப பூஜை முடிந்த பின்னர் புண்யாகவாசனம், ஸ்தம்ப ஆவாஹன பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் நடத்தி, அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு தேர் நிலைக்கு வந்து முகூர்த்தக்காலுக்கு பல்வேறு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க ஆவாஹணம் செய்யப்பட்டது.

ஆகம முறைப்படி பூஜைகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் இரா.இலட்சுமணன், ஸ்தானிகர் ரங்கராஜன் என்ற ரமேஷ், மணியம் கோபி ஸ்ரீ ராமன், சுதர்சன், ஏழுர் நாயுடு மகாஜன சங்கத் தலைவர் வெங்கடேஷ் பெருமாள், சங்க செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் கோவில் செயல் அலுவலர் லட்சுமணன் கோவில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply